மதிய நேரங்களில் அளவான உணவு எடுக்கவில்லை என்றால், விபத்து நேரிடுமா?. இந்த ஆண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,563. புதிய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்.

இரவு நேரங்களில் அதிகமான விபத்துக்கள் நடைபெறும் என்று நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் மதிய நேரத்தில், அதுவும் மதிய உணவுக்கு பிறகுதான் விபத்துகள் அதிகமாக நடைபெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, 20 ஆண்டுகளில் தமிழகத்தில் 66,238 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு மட்டும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,563 ஆகும்.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 50 நகரங்களில் 1,20,292 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் 17,007 பேர் உயிரிழந்துள்ளனர். 80,380 பேர் காயமடைந்தனர். இந்த 50 நகரங்களின் பட்டியலில் ஆக்ரா, ஆமதாபாத், அலகாபாத் நகரங்கள் முதல் 3 இடங்களிலும், சென்னை, கோவை நகரங்கள் 10, 11-வது இடங்களிலும், மதுரை, திருச்சி நகரங்கள் 32, 36-வது இடங்களிலும் உள்ளன.

தற்போது மதிய உணவுக்குபின், பகல் 3 முதல் மாலை 5 மணி வரையிலான நேரங்களில் அதிக விபத்துகள் நடைபெறுகிறது என்று மாநில குற்ற ஆவணப் பிரிவு (எஸ்.சி.ஆர்.பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, நூறு சதவித விபத்துகளில் அதிகாலை 6 முதல் 9 மணி வரை 11.3 சதவீதம், காலை 9 முதல் பகல் 12 மணி வரை 15.8 சதவீதம், பகல் 12 முதல் நன்பகல் 3 மணி வரை 15.4 சதவீதம், நன்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை (மதிய உணவுக்குப்பின்) 17.1 சதவீதம், மாலை 6 முதல் இரவு 9 மணி வரை 16.9 சதவீதம், இரவு 9 முதல் நள்ளிரவு 12 மணி வரை 10.6 சதவீதம், நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை 6.1 சதவீதம், பின்னிரவு 3 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 6.8 சதவீத விபத்துகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.


விபத்துகளில் இருந்து உங்களை பாதுகாக்க வேண்டாமா?.

1. நான் தான் முன்னே செல்வேன் என்று போட்டி போட்டு செல்லும்போது விபத்துகள் அதிகரிக்கின்றன.

2. சிக்னல்களை மதித்து நடந்தால், விபத்துகள் நடக்காமல் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வோம்.

3. மதிய நேரங்களில் வாகனம் ஓட்டும் நிலை வந்தால், மதியம் குளிர்ச்சியான, அளவான உணவு சாப்பிட வேண்டும்.

4. மதிய உணவுக்கு பின் லேசான உறக்கம் வருவது என்பது வழக்கமான ஒன்று. உறக்கம் வருகிறது எனத்தெரிந்தால், வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் வாகனத்தை  இயக்கலாம்.

5. இரவில் தூக்கமின்மை காரணமாகவும், மதிய நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதாலும் விபத்துகள் நடைபெறுகின்றன. மதிய வேளையில் நீண்ட தூரத்துக்கு வாகனம் ஓட்டிச் செல்வதாக இருந்தால் குறைவாக உணவு எடுக்க வேண்டும். வெயிலால் பார்வையும் தெளிவாக இருக்காது. இதனால் மதிய நேரத்தில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

6. இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவராக இருந்தால், ஹெல்மெட் அணியுங்கள். விபத்து ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம். கார் ஓட்டுபவராக இருந்தால், சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள். சில வாகனங்களில், சீட் பெல்ட் அணிந்தால் மட்டுமே ஏர்பேக் இயங்கும். ஏர்பேக் இருந்தால் நிச்சயம் உங்கள் உயிரை காப்பாற்றி விடலாம். குடும்பத்தில் இருப்பவர்களை நினைத்து வாகனங்களை, 50 கி.மீ வேகத்திற்குள் ஓட்டுங்கள். எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

இந்த கட்டுரையை எழுதுவதற்கு உதவிய, தி ஹிந்து தமிழ் நாளிதழிற்கு நன்றி.


No comments:

Post a Comment