எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பிரச்சனைகளில் இருந்து, உங்கள் வாரிசுகளை காப்பாற்ற வேண்டாமா?.


நம் அன்றாட வாழ்க்கையில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் அதிகமாகவே இருந்து வருகிறது. சில வருடத்திற்கு முன்பு, பால் வாங்க வேண்டும் என்றால் Society க்கு பாத்திரம் எடுத்துச் செல்வோம். தற்போது,  எங்கு பார்த்தாலும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடை, பாஸ்ட்புட் உணவகம் என வளர்ச்சி அடைந்துவிட்டது. வளர்ச்சி நமக்கு தெரியாமல், ஆபத்தையும் கொடுத்து வருகிறது.


பயன்படுத்தும் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் என்ன?.


1. பால் பாக்கெட், காய்கறிகள் வாங்கும் பாலீத்தின் கவர் மற்றும் மளிகை கடைகளில் வாங்கும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்யப்பட்டிருக்கும் (இதில் வரும் பிளாஸ்டிக் கவர்களை குப்பையில் கொட்டுகிறோம்)


குப்பைக்குச் செல்லும், அந்த பிளாஸ்டிக் கவர்களினால் டெங்கு, மலேரியா, டைபாய்டு, கேன்சர் போன்ற நோய்கள் நம்மை தாக்கும். எப்படி என்று நினைக்கிறீர்களா?. மழை காலங்களில் குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் கவரில் தண்ணீர் தேங்கி நின்று கொசுக்களை உருவாக்கும். கொசு மூலம் டெங்கு, மலேரியா, டைபாய்டு நோய் பரவும். பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால், புகை பரவும். அந்த புகை மூலம் கேன்சர் நோய் பரவும். பிளாஸ்டிக் புகை மூலம் கேன்சர் பரவும் என்று விங்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது

2. கடைகளில் வாங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில்களை எரிக்கும் போது கேன்சர் பரவும்.
அதுமட்டுமில்லாமல், பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்தால் நிலத்தடி நீர் சேமிப்பும் பாதிக்கப்படுகிறது. ஆம், மழை காலங்களில் தண்ணீர் நிலத்திற்கு செல்லாமல், பிளாஸ்டிக் பொருட்கள் தடுத்துவிடும். பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கலந்தால் மக்குவதற்கு 100 லிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிடும். அதனால், எதிர்காலத்தில் உங்கள் வாரிசுகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடைக்காது. வாரிசுகளை காப்பாற்ற நினைப்பவர்கள் தயவு செய்து பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டியிலோ, மண்ணிலோ போட வேண்டாம். 

தேவையில்லா பிளாஸ்டிக் பொருட்களை, கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிடலாம். 


உங்கள் வீட்டில் இருக்கும் தேவையில்லா பிளாஸ்டிக் பொருட்களை குறைந்தபட்சம் 5 கிலோவாக சேர்த்து வைத்து, 7402291000 (ஈரோடு மாவட்டத்திற்கு மட்டுமே இந்த சேவை) மிஸ்கால் கொடுங்கள். உங்களுக்கு போன் செய்து, நேரடியாக வந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கிச் செல்வார்கள். 


எதிர்கால நலன் கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்


No comments:

Post a Comment