நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன?.
நிலம் கையகப்படுத்துதல் என்பது தனி நபருக்குச் சொந்தமான நிலத்தை, ஏதேனும் பொது நோக்கத்திற்காகவோ, அரசு அல்லது அரசு தொடர்புடைய நிறுவனங்களுக்கோ வழங்கும்போது. சட்டப்படி, அரசு நிர்ணயிக்கும் இழப்பீட்டை உரியவருக்கு வழங்கி அந்நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்பதற்காக 1894 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் இது.
இருபது வருடத்திற்கு முன், இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால். ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றால் விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவார்கள் அல்லது குறைந்த கட்டணத்தில் எழுதி வாங்குவார்கள் அல்லது இழப்பீட்டு தொகையை கொடுக்காமல், மக்களை ஏமாற்றி வருவார்கள். அப்படி செய்துவந்தவர்களை, ஒழுங்குபடுத்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை 07 செப்டம்பர் 2011 அன்று மக்களவையில் "இந்திய நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று சட்டத்தை மாற்றி அமைத்தார்கள். தற்போது, இந்திய வளர்ச்சிக்கு நிலம் கையகபடுத்தும் சட்டம் முக்கிய காரணமாக உள்ளது. தொழில் தொடங்க வேண்டும் என்றால் நிலம் வேண்டுமே. அதற்காக, மறுபடியும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாற்றி புதிய கட்டமைப்பை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.
விவசாய நிலம் பாதிக்குமா?. இதைப்படியுங்கள்!!!
இந்தியாவில் 100 சதவித நிலமும், விவசாயத்திற்காக பயன்படுகிறதா?. நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மசோதாவிற்கு எதிராக கொடிபிடிப்பவர்கள், விவசாய நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும்போது எங்கே சென்றார்கள். கொடிபிடிப்பவர்களே ரியல் எஸ்டேட் தொழிலை செய்தும் வந்தார்கள். விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், விவசாயத்திற்கே பயன்படாமல் இருக்கும் வரண்ட பூமியில் தொழிலை தொடங்கினால் என்ன?. தொழிற்சாலைகள் விவசாய நிலத்தில் தான் நடத்துவோம் என்று நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்களா?. வரண்ட பூமியில் என்னங்க வரப்போகுது. அதில் தொழிற்சாலை வந்தால் நமக்குத்தானே நல்லது. நமக்கும் வேலை கிடைக்கும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக உசுப்பேத்தி விடுபவர்கள் விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள். விவசாயி மகனுக்கு வேலை வாங்கித்தருவார்களா? அல்லது கல்லூரியில் படிக்கவைத்தார்களா?. தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கல்லூரியில் படித்தவர்களுக்கு மட்டுமே மதிப்பு என்று சொல்லுவார்கள். வெறும் கல்லூரியில் படித்தால் போதுமா, நிறைய நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டுமே எதிர்காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு. தமிழகத்தில் 565 கல்லூரிகளை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஏன், அப்போது விவசாயம் அழியவில்லையா?.
நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மசோதா, எப்படி இருக்க வேண்டும்?.
தனி நபருக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் போது, நிலத்தின் மதிப்பை சரியாக கணக்கிடப்பட வேண்டும். (எடுத்துக்காட்டாக. ஒரு ஏக்கர் நிலத்தை, பத்து லட்சம் கொடுத்து வாங்கியிருப்பவரிடம் ஆறு லட்சத்தை கொடுத்து நிலத்தை கேட்டால் எப்படி தருவார். அவருக்கு பத்து லட்சம் அல்லது அதற்குமேல் பணத்தை கொடுத்தால் மட்டுமே சம்மதிப்பார். கஷ்டப்பட்டு வாங்கும் நிலத்தை, குறைந்த விலையில் கேட்டால். யாரும் சம்மதிக்க மாட்டார்கள்). மக்களை பாதிக்காத வகையில் மசோதாவை கொண்டு வாருங்கள்.
இப்படியும் செய்யலாமே?.
E-Auction போன்று ஆன்லைனில் கொண்டு வாருங்கள். அதாவது, நிலத்திற்கான மதிப்பை சரியாக கணக்கிடப்பட்டு, உரிமையாளரிடம் மத்திய அல்லது மாநில அரசு கருத்துக்களை கேட்க வேண்டும். உரிமையாளர் சரி என்றால், ஆன்லைனிலேயே பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பின்னர், நிலத்திற்கான பணத்தை செக் அல்லது டி.டி. மூலம் மத்திய அல்லது மாநில அரசு நில உரிமையாளருக்கு கொடுத்தவுடன், நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்று செய்தால் ஏன் போராட்டம் நடத்தப்போகிறார்கள்?. இல்லையெனில், நில உரிமையாளரின் வாரிசுகளுக்கு அந்த நிறுவனத்தில் வேலை கொடுங்கள். எதிர்கால நலனை கருத்தில்கொண்டு, மக்களுக்கு பாதிக்காத வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் மசோதாவை கொண்டு வாருங்கள்.
குறிப்பு: இந்த கட்டுரையை படித்து கேள்வி கேட்க விரும்புபவர்கள், தயவுசெய்து, பத்து வேலையில்லா பட்டதாரிக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட்டு கேள்வி கேளுங்கள். அப்போதுதான், படித்து வேலையில்லாமல் இருக்கும் மாணவர்களின் நிலமை உங்களுக்கு புரியும்.
சிந்தித்து செயல்படுங்கள். எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் கொங்குமலர் ஆன்லைன் பத்திரிக்கை.
இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், தயவுசெய்து உங்களது நண்பருக்கு பகிருங்கள்.
No comments:
Post a Comment