தமிழரான வா.சிவா அய்யாதுறை அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இ-மெயில். 2009 ஆம் ஆண்டில் சிறந்த இந்திய வம்சாவளி தொழில்நுட்ப விங்ஞானியாக சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 2009 அன்று இந்திய கண்டுபிடிப்புகளுக்கு தடைகளாக இருக்கும் குறிப்பிட்ட மற்றும் அடிப்படை பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்காக நேர்மையான நோக்கத்துடன் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள், சிவா அவரிடன் சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் தொடர்பில் இருந்த 4500 விங்ஞானிகளின் தொடர்பும், அவரது இ-மெயில் தொடர்பும் நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமா, சிவா அவரை மிரட்டி வழுக்கட்டாயமாக இந்தியாவில் இருந்தே வெளியேற்றிவிட்டார்களாம். இந்த தகவல்களை வா.சிவா அய்யாதுறை அவரால் http://vashiva.com/exposing-corruption-at-csir-the-report-that-got-me-fired/ யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் திறமைசாலிகளுக்கு இடம் இல்லை என்று பல விங்ஞானிகள் வெளிநாடு செல்வதற்கு இது போன்ற செயல்களும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதை. Dr. சிவா அய்யாதுறை, Mr.சுந்தர்பிச்சை, Mr.சத்ய நாடெல்லா என இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் இருந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
News update: www.kongumalar.com
இனிமேல் எல்லோரும் சொல்வாங்க... "இந்தியன் என்று சொல்லடா, வெளிநாட்டில் தலைநிமிர்ந்து நில்லடா?".