பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப் பிரிவில் செய்தி வாசிப்பாளர், செய்தியாளர், உதவி செய்தி ஆசிரியர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். செய்தி வாசிப்பாளர் பணியில் சேர விரும்புவோர் இதழியல் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். செய்தியாளர் மற்றும் உதவி செய்தி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் இதழியல் அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் தொலைக்காட்சி அல்லது பத்திரிக்கை நிறுவனத்தில் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். 25 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன் தகுதிச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப உறையின்மீது விண்ணப்பிக்கவிருக்கும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர் (செய்திப்பிரிவு), சென்னை தொலைக்காட்சி நிலையம், சுவாமி சிவானந்தா சாலை, சென்னை – 600 005.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 20.9.15
விவரங்களுக்கு: www.ddpodhigai.org.in
No comments:
Post a Comment