பிளாஸ்டிக் மூலம் தயாரிப்பதனால் பிளாஸ்டிக் அரிசி என்று பெயர் சொல்கிறார்கள். அது உண்மையானு யோசுத்துப் பார்த்தீங்களா?. பிளாஸ்டிக் மூலம் அரிசியை தயார் செய்தால் சாப்பிடவே முடியாதுங்க. உண்மைய சொன்னா, பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கும் பொருள் "அரிசி" போன்ற தோற்றம் இருக்கும் பெயர் "தானா" என்று சொல்வார்கள். அதை சாப்பிடவே முடியாது.
சீனாவில் அரிசியை எப்படி தயாரிக்கிறார்கள்?
1. மரவள்ளிக் கிழங்கை அரைத்து அரிசியுடன் சேர்த்து, சில வேதிப்பொருட்களையும் கலந்து உற்பத்தி செய்கிறார்கள். (தெரிந்துகொள்ளுங்கள்: மரவள்ளிக் கிழங்கு மாவை பயோ பிளாஸ்டிக்யை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.)
2. நெல்லில் இருந்து உமியை பிரிக்கும்போது அரிசி உடைந்து விழுகிறது. இதை "குருணை" என்று சொல்வார்கள். குருணை அரிசியை அரைத்து மாவாக்கி, அதை அச்சில் வைத்து மீண்டும் முழு அரிசியாக மாற்றுகிறார்கள்.
3. மாத்திரையைப் போன்று விட்டமின்களைச் சேர்த்து அரிசியை தயாரிக்கிறார்கள்.
இந்த சீனா அரிசியை சாப்பிட்டால், உடல் நலத்துக்கு நல்லதா?.
நம்ம ஊரில் இயற்கையான முறையில் தயாராகும் அரிசியை சாப்பிட்டாலே, தொப்பை போடுதுனு சப்பாத்தி சாப்பிடுகிறோம். இந்த சீனா அரிசியை சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com
சீன அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?.
1. சாதாரண அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கழுவினால், அரிசி நனைந்து தண்ணீரில் மூழ்கிவிடும். ஆனால், பிளாஸ்டிக் கலப்பட அரிசி எளிதில் மூழ்காது.
2. சுடுதண்ணீரில் வெந்த அரிசியை நசுக்கிப்பார்த்தால், மாவுபோல உதிர்ந்துவிடும்.
3. சமைத்து சில நாட்கள் ஆன பின்னரும் கெட்டுப்போகாது.
4. வேதிப்பொருட்கள் இருப்பதால், உலை கொதிக்கும்போது மேலே ஆடைபோல வரும்.
5. வெந்த அரிசியை சூடு ஆறிய பின்னர் எரித்தால், மரவள்ளிக்கிழங்கின் வாசனையுடன் பிளாஸ்டிக்போல நின்று எரியும்!...
No comments:
Post a Comment