உங்க நெம்பருக்கு 35000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி மொபைல் பரிசு விழுந்திருக்கும் பாருங்க?..


ஹலோ, உங்க மொபைல் நெம்பருக்கு 35000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி மொபைல் பரிசு விழுந்திருக்கு. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்ததில் உங்க நெம்பருக்கு மட்டும் தான் பரிசு...னு ஒரு லேடி உங்களுக்கு போன் பண்ணி பேசுவாங்க. எனக்கு எதுக்குங்க நீங்க பரிசு தரீங்கனு கேட்டா.. இது சாம்சங் கம்பெனி விளம்பரம்னு சொல்லுவாங்க.. சரி, பரிசை கொடுங்கனு சொன்னா வீட்டு முகவரியை சொல்லுங்கனு சொல்வாங்க. அப்புறம் பாருங்க.. சார், உங்க வீட்டு முகவரிக்கு பார்சல் அனுப்புகிறோம். 2500 ரூபாயை கொடுத்து பார்சல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அடுத்த நாள், வேறு ஒரு லேடி பேசுவாங்க. 2500 ரூபாய் எதுக்கு தர வேண்டும் என்று சொல்லிப்பாருங்கள். 35000ரூபாய் சும்மா வருது 2500ரூபாய் கொடுத்தா என்ன?. னு ஒரு கேள்வி வரும். உஷாராக இருப்பவர்கள் வேண்டாம் என்பார்கள்.. பண ஆசைப்படுபவர்கள், 2500 ரூபாய்க்கு 35000 ரூபாய் வரும் என்று நினைத்து சரி என்பார்கள். அப்புறம் பாருங்க, உங்களுக்கு பார்சலில் வெடி வரும்.. ஆமாங்க, அந்த பார்சலை பணம் கொடுத்தால் மட்டுமே வாங்க முடியும். பணம் திருப்பித்தரமாட்டார்கள். பார்சலை பிரித்துப் பார்த்தால், குப்பையில் போடும் மொபைலை வைத்திருக்கிறார்கள்.. அட, இது ஒரு மாதிரியான பிசினஸ். 100 ரூபாய்க்கு கூட விற்கப்படாத மொபைலை 2500 ரூபாய்க்கு விற்றுவிட்டார்கள். பணம் ஆசைப்படுபவர்களுக்கு இது ஒரு பாடம். பணம், கஷ்டப்படாம வராது. அப்படி வந்தா, இருக்காது!!!! புரிந்தவர்கள் புத்திசாலிகள்..
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்

 

No comments:

Post a Comment