கல்விக்கடன் வாங்கலாமா?. விதிமுறைகள்?. விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன?. கல்விக்கடனை திரும்ப செலுத்த முடியவில்லையா?.

சாதாரண குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள், என்ஜினீயரிங் அல்லது மெடிக்கல் கல்லூரியில் சேர முடியுமா?. அப்படி சேர வேண்டும் என்றால், 5 லட்சம் முதல் ஒரு கோடி வரை செலவு ஆகுமே. அதன் காரணமாகத் தான் அனைவருக்கும் கல்வி எனும் நோக்கத்தில் இந்திய அரசு, கல்விக் கடன் திட்டத்தை தொடங்கியது. அதன் மூலம் கோடிக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். நீங்களும் பயன்பெற சில வழிமுறைகள்.
கல்விக்கடன் என்பது கல்லூரி படிப்பு முடியும் வரை வங்கி மூலம் கல்லூரி அல்லது விடுதிக் கட்டணம், தேர்வு கட்டணம், லேப் கட்டணம், புத்தகம், சீருடைகள் மற்றும் பிராஜெக்ட்களுக்கு கல்விக் கடன் உதவி வழங்கப்படும்.
வயது வரம்பு: 16லிருந்து 30க்குள் இருக்க வேண்டும்.
இந்தியாவில் படிக்க விரும்பினால் 10 முதல் 12 லட்சம் வரை கல்விக் கடனும், வெளிநாட்டில் படிக்க விரும்பினால் 20 முதல் 50 லட்சம் வரை கடனுதவியை வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.
மெடிக்கல், மேனேஜ்மெண்ட், என்ஜினீயரிங், அக்ரிகல்சுரல், சட்டம், பல் மருத்துவம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி, எம்.எஸ்.சி, எம்.ஏ, பி.ஹெச்.டி (டாக்டர்) என அனைத்து பிரிவுகளுக்கும் கல்விக் கடன் கிடைக்கும். நீங்கள் படிக்கும் கல்லூரி யூ.ஜி.சி அல்லது ஏ.ஐ.சி.டி.இ அப்ரூவ்டு பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவார்கள்.
தேவையான ஆவணங்கள் என்ன?.
1. பத்தாவது அல்லது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.
2. கல்லூரியில் இருந்து பெறப்படும் அட்மிஷன் லெட்டர்.
3. கல்லூரியில் இருந்து Bonafide certificate வாங்கி கொடுக்க வேண்டும். அதில், எத்தனை வருடம் படிக்கிறோமோ. அதற்கான கல்லூரி கட்டணம் அல்லது விடுதிக் கட்டண விவரங்கள் இருக்கும்.
4. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்.
5. ஆறு மாத வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட்.
6. இரண்டு வருடத்திற்கான வருமான வரி விவரங்கள்.
7. கடன் பணத்திற்கு நிகராக சொத்து விவரங்களை செக்யூரிட்டிக்காக கொடுக்க வேண்டும். 4 லட்சத்திற்குள் கடன் வாங்குபவர்கள் சொத்து விவரங்களை கொடுக்க தேவையில்லை. 4 லட்சம் மேல் என்றால் கொடுக்க வேண்டும். 8. கல்விக்கடன் வாங்கும் பொழுது இரண்டு டி.டி ஆக வங்கியில் இருந்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஒன்று கல்லூரி கட்டணத்திற்காக, மற்றொன்று விடுதிக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு.
கடன் செலுத்த கால அவகாசம்:
1. கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதத்தில் இருந்து கல்விக் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
2. படிப்பை முடித்து 6 முதல் 7 வருடத்திற்குள் கல்விக் கடனை செலுத்த வேண்டும்.
எப்படி கல்விக் கடனை செலுத்துவது:
படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் சேர தயாராகுங்கள். சம்பளத்தில் இருந்து மாதம் 5000 ரூபாய் செலுத்தி கடனை திரும்ப செலுத்துங்கள். இல்லை என்றால், வட்டி மேல் வட்டி போட்டுக் கிட்டே இருப்பார்கள்.
அறிவுரை: தயவு செய்து வங்கியில் கல்விக் கடன் வாங்குவதை தவிர்த்திடுங்கள். நல்ல வேளை கிடைக்க வில்லை என்றால், நம்மால் கட்டணத்தை திரும்ப செலுத்தாமல் போய்விடும். வட்டியும் ஏறிக்கொண்டு போய்விடும்.

No comments:

Post a Comment