பட்டதாரி மாணவர்களுக்கு வங்கியில் அதிகாரி வேலை


பாரத ஸ்டேட் வங்கி அல்லாத 22 பொதுத் துறை வங்கிகளில் Specialist officers பணியில் சேர விரும்புபவர்களுக்கு வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
அலகாபாத் வங்கி, ஆந்திர வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்ரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி ஆகிய வங்கிகளில் Specialist Officers பணி இடங்களில் சேர விரும்புபவர்கள் இந்த எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். Specialist Officers பணியில் ஐ.டி.அதிகாரி, அக்ரிகல்சுரல் ஃபீல்டு அதிகாரி, சட்ட அதிகாரி, ஹெச்.ஆர்/ பெர்சுனல் அதிகாரி, மார்கெட்டிங் அதிகாரி போன்ற பணிகள் உள்ளன.
கல்வித்தகுதி:
ஐ.டி.அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ/ பி.டெக் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் அல்லது DOEACC 'B' சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
அக்ரிகல்சுரல் ஃபீல்டு அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு agriculture, horticulture, animal husbandry, veterinary science, dairy science, fishery science, pisciculture, agri marketing & co-operation, co-operation & banking, agro-forestry ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் 4 வருட இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்ட அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு சட்ட துறையில் (LLB) இளநிலைப் பட்டத்துடன் பார் கவுன்சிலில் அட்வகேட் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஹெச்.ஆர்/ பெர்சுனல் அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டத்துடன் பெர்சுனல் மேனேஜ்மெண்ட், இன்டஸ்ட்ரீயல் ரிலேஷன், ஹெச்.ஆர், social work, labour law ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.ஜி டிகிரி அல்லது பி.ஜி டிப்ளமோ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
மார்கெட்டிங் அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டத்துடன் மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ டிகிரி அல்லது பி.ஜி டிப்ளமோ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அதாவது 2-11-1984-க்கு முன்னதாகவோ அல்லது 1-11-1994க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு. தகுதி உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் சட்ட அதிகாரி பணிக்கு ரீசனிங், ஆங்கில மொழி,  வங்கித் தொழில் பற்றிய பொது விழிப்புணர்வு, Professional knowledge ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ரீசனிங் பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், ஆங்கில மொழிக்கு 25 மதிப்பெண்களூம், வங்கித் தொழில் பற்றிய பொது விழிப்புணர்வுக்கு 50 மதிப்பெண்களும், Professional knowledge பிரிவுக்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படும்.
ஐ.டி அதிகாரி, அக்ரிகல்சுரல் அதிகாரி, ஹெச்.ஆர்/ பெர்சுனல் அதிகாரி, மார்கெட்டிங் அதிகாரி பணிகளுக்கு ரீசனிங், ஆங்கில மொழி,  Quantitative aptitude, Professional knowledge ஆகியவை குறித்து மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ரீசனிங் பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், ஆங்கில மொழிக்கு 25 மதிப்பெண்களூம், Quantitative aptitude பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், Professional knowledge பிரிவுக்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்படும். ஆங்கில மொழிக்கான கேள்விகள் தவிர, மற்ற பிரிவுகளுக்கான கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படும்.
தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த ஆன்லைன் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் இத்தேர்வை எழுதலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத முடியும். தேர்வு மையத்தை மாற்றுவதற்கு அனுமதி கிடையாது.
இத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டதும், நேர்முகத் தேர்வுக்கான தேதி முடிவாகும்.
எழுத்துத் தேர்வுக்கும், நேர்முகத் தேர்வுக்கும் 80:20 என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தகுதியுடைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.ibps.in என்கிற இணையதளத்திற்குச் சென்று "CWE Specialist Officers" எனும் பிரிவில் இருக்கும் “CLICK HERE TO APPLY ONLINE FOR CWE-Specialist Officers (CWE-SPL-IV)" யை கிளிக் செய்யவும்.
2. அதில் ”Click here for new registration" பிரிவுக்குச் சென்று சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
3. விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100/-, மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600/-.
5. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பாங்கிங் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
6. ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான முறைகள் குறித்து இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 09.12.2014
விண்ணபதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2014
மேலும் விவரங்களுக்கு: www.ibps.in

No comments:

Post a Comment