14 வருடம் லீவே எடுக்காத மாணவன்



எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை லீவே கிடையாதா? ஈரோடு மாவட்டத்தில் உள்ள N.G.G.O காலனி 15வது தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர் N.S.பார்த்தீபன்,அவரது அப்பா செல்வராஜ் மேட்டூர் ரோட்டில் டயர் வியாபாரம் செய்து வருகிறார் ,அம்மா ராதா குடும்பத் தலைவி,அக்கா ப்ரித்தி தனியார் கல்லூரியில் Bsc கணினி மூண்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறார்.N.S பார்த்தீபன் எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கு லீவ் எடுக்காமல் சென்றிருக்கிறார் என்று கேட்டவுடன்.நாம் பள்ளிக்குச் செல்லும் போது ஞாயிற்றுகிழமையை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம், வீட்டில் விசேஷம் என்றால் பள்ளிக்குச் செல்வதற்கு மனது இடம் கொடுக்காது. எப்படி அவர் இதையெல்லாம் தாண்டி பள்ளிக்குச் சென்றிருப்பார் என்கின்ற கேள்வியுடன் அவர் வீட்டிற்குச் சென்றேன்.விருந்தோம்பலுக்குப் பிறகு,பார்த்தீபன் தனது சான்றிதழ்களை கொடுத்தார்.சான்றிதழ்களை பார்த்தவுடன் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அவர் பள்ளிக்கு லீவ் எடுக்காமல் செல்வது மட்டும் அல்ல கூடைப்பந்து,செஸ்,நீச்சல் ஆகிய விளையாட்டில்களிலும் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் சேர்த்தல் படிப்பில் கவனம் இருக்காது என்கின்ற அச்சத்துடன் உள்ளார்கள்.இதனை பார்த்தீபன் முறியடித்துள்ளார். ஆம்,பார்த்தீபன் விளையாட்டில் இருந்தும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் எடுத்துள்ளார்.தற்போது பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழதி இருக்கும் பார்த்தீபன் 1100 க்கு மேல் வரும் என்று உறுதியாகச் சொல்கிறார்.எப்படி விளையாட்டில் ஆர்வம் வந்தது, உங்களுக்கு தூண்டுகோளாக இருந்தவர் யார் என்று கேட்டேன்.அதற்கு அவர் "எனது அப்பா,சிறிய வயதில் இருந்து விளையாட்டில்களில் நிறைய பதக்கங்களை பெற்றுள்ளார். அப்பாவைப போன்று நானும் வாங்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம்,அது மட்டும் இல்லாமல் B.V.B பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ஆசிரியர்கள் முத்துராஜ்,ராம்குமார் மற்றும் தாளாளர் டாக்டர் L.M ராமகிருஷ்ணன் அவர்களின் ஊக்குவிப்பால் கூடைப்பந்து விளையாட்டில் சான்றிதழ்களைப் பெற்றேன்,நீச்சல் விளையாட்டில் வாசவி கல்லூரி ஆசிரியர் ரமேஷ் ஊக்குவித்தார் " என்று மனம் நெகிழ்வுடன் கூறினார்பார்தீபனிடம், அணைத்து மாணவர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டேன்அதற்கு அவர் " லீவ் எடுக்காமல் சென்றால் ஹோம் வொர்க் குறைவாக இருக்கும்,படிப்பதற்குச் சிரமம் இருக்காது" என்றார்.பார்த்தீபனின் கனவு?"கல்லூரியிலும் லீவ் எடுக்காமல் செல்லவேண்டு,மெக்கானிக் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்" என்றார். பார்த்தீபன் மேலும் வெற்றி பெற புதியதலைமுறையின் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment