இரண்டு நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவை பார்த்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் அதிர்ச்சியான தகவல். என்னவென்று கேட்கிறீர்களா?. நன்றாக படித்துவரும் ஒரு மாணவன் அரியர் வைத்திருக்கிறான் என்றால் நம்ப முடியுமா?. நம்ப வைக்கும் அளவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ரிசல்ட் வந்துள்ளது.
மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
"மதிப்பெண்களை குறைத்து , "revaluation" மறுகூட்டல் என்னும் யுக்தியை கையாண்டு கோடி கோடியாய் ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் சம்பாதித்து வருகிறது சென்னை அண்ணா பல்கலைக்கழகம். முக்கியமாக மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைத்து, மாணவர்களின் வேலை வாய்ப்பை பறித்து வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விடுகிறது" என்கிறார் நான்காம் ஆண்டில் படித்துவரும் ஒரு மாணவன்.
"Civil, ECE ஆகிய துறைகளில் 80% க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து உள்ளனர். வழக்கமாக 90% க்கும் மேலான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களும் இம்முறை தோல்வி அடைந்து உள்ளனர். இதில் வருமானம் பார்க்க ஒரு ஐடியாவை கையாண்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். அதுதான் மறுகூட்டல் வருமானம். அதாவது, அனைத்து மாணவர்களையும் மறு கூட்டல் போட வைத்து, ஒரு தாளுக்கு தலா 800 ரூபாய் வாங்கி தன் கஜானாவை நிரப்பிக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் தங்களது வாழ்க்கையை கருத்தில் கொண்டு, வேறு வழி ஏதும் இன்றி 800 ரூபாய் கொடுத்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கின்றனர்." என்கிறார் ரமேஷ், மூன்றாம் ஆண்டில் படித்துவரும் மாணவர்.
பல மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்க கூடாது!! அண்ணா பல்கலைக்கழகம் சற்று யோசித்து கட்டணங்களையாவது குறைக்கலாம்.
Pls say that amount collected for revaluation is high ...I Accept ...But dont say that today college going "tomorrow's engineers" are really studying but scoring poor marks ...Ask students to reply truly, if they put necessary effort for scoring 90% in semester exams ...
ReplyDelete