சென்னை மற்றும் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாரண பொருட்கள் வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டுவருகிறது. இதனால் வரும் 11ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காி 3 டிசம்பர் அன்று அறிவித்தார். ஆனால் அதன்பின்னரும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல சுங்கசாவடிகளில் அரசின் உத்தரவை மீறி சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டுவருகிறது. வாக்குவாதம் செய்பவர்களிடம் மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை.
மத்திய அரசின் உத்தரவை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
மத்திய அரசின் உத்தரவை மீறி சுங்கசாவடிகளில் கட்டணம் வசூல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment