சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி (02605) ,மதுரைக்கு (02635) இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு (02605) இன்று பிற்பகல் 2 மணிக்கும், இரவு 10.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு (02635) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. திருச்செந்தூருக்கு மாலை 04.30 மணிக்கும் மற்றும் நெல்லைக்கு இரவு 08.15 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்
No comments:
Post a Comment