ஈரோடு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

News Update by www.kongumalar.com

சென்னையில் கடந்த சில தினங்களாக இடைவிடாத மழை. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் மிகவும் சிரமப்பட்டுவருகிறார்கள். தங்குவதற்கு இடம், உணவு, உடைகள் என அரசும், சமூக ஆர்வலர்களும் செய்துவருகிறார்கள். சிலர் வெள்ளத்தினால், வீட்டிலிருந்து வெளியே வரமுடியாமல், உணவு இன்றி சிக்கித் தவித்துவருகிறார்கள். கைக்குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், சிறியவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கான நம் சொந்தங்களுக்கு பிஸ்கெட், பிரெட், துணிகள், பாய், போர்வைகள், லுங்கிகள், தண்ணீர் பாட்டில்கள் என்று நம்மால் முடிந்த உதவியைச் செய்வோம். ஈரோடு மாநகராட்சி மூலம் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சவிதா மருத்துவமனை செல்லும் வழியில் இருக்கும் தமயேந்தி பாபுசேட் கல்யாண மண்டபத்தில் 2 நாட்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நேரடியாகவே அதிகாரிகளிடம், நிவாரண பொருட்களை கொடுக்கலாம். 

மேலும் நிவாரணம் சம்பந்தப்பட்ட விவரங்களுக்கு, அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். 
ஆறுமுகம் (எக்சிக்யூட்டிவ் என்ஜினீயர்): 94890 93205

விஜயகுமார் (உதவி ஆணையர் – மண்டலம் 4): 94890 93212

அசோக்குமார் (உதவி ஆணையர் – மண்டலம் 2): 94890 93214

No comments:

Post a Comment