கடலூரில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் கட்டுக்கடாமல் வெளியேறும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மீண்டும் ஒரு துயரத்தை சந்தித்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள். தொடர்மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டதோடு, குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டு வந்தபோதிலும் மழை பெய்து கொண்டே இருப்பதால் அப்பணியில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் 180 பேர் கொண்ட ராணுவ மீட்பு குழுவினர் 2 குழுக்களாக கடலூர் விரைந்துள்ளனர்.
No comments:
Post a Comment