Happy birthday kongumalar

🙏🏾கொங்குமலர் இணையதளம் இன்று முதல் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொங்குமலரின் சென்ற ஆண்டு வருமானக்கணக்கையும் உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம். 

ஈரோடு மாவட்டத்திற்கு முழுமையான உதவியை செய்யலாம் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் கொங்குமலர். அரசியல், ஜாதி சம்பந்தப்பட்டதாக இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. இதுவரை அதை பின்பற்றியும் வருகிறோம். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்தே ஆக வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் சவூத் ஆஃப்ரிக்கா மற்றும் வடமாநிலங்களைப் போன்று இருப்பது போல் மாவோயிஸ்ட், கொலை, திருட்டு ஆகிய செயல்கள் தமிழ்நாட்டிலும் அதிகரித்துவிடும். செலவுக்கு பணம், வறுமை, பசி, ஏமாற்றம் போன்ற காரணங்களால் தான் இதுபோன்ற செயல்கள் ஏற்படுகின்றன. வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையை புரிந்துகொண்டு பல இடைதரகர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றியும் வருகிறார்கள். இதுபோன்ற செயல்களில் இருந்து இளைஞர்களை காத்திடவே, 4.11.2014 அன்று www.kongumalar.com உதயமானது.

இன்றுடன் ஒரு வருடம் முடிந்தது. 2186 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இலவசமாக கொடுத்துள்ளோம். 56 வாட்ஸப் குரூப் மூலம் 5469 இளைஞர்களுக்கு வாட்ஸ்அப்பில் நேரடியாக உதவி செய்து வருகிறோம். காலை 6 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இலவச சேவையில் கொங்குமலர் இயங்கி வருகிறது. எங்களைப் பார்த்து, எல்லோரும் பொதுவாக கேட்கப்படும் கேள்வி. கொங்குமலரில் எவ்வளவு வருமானம் வருகிறது?. கொங்குமலர் இணையதளத்தை எல்லோரும் நல்ல இருக்குனு சொல்றாங்க...

2014-2015 ஆம் ஆண்டு கொங்குமலரின் செலவு, கணக்குகளை நேரடியாகவே சமர்ப்பிக்கிறோம்.
இணைய்தளம் மற்றும் இன்டர்நெட் கட்டணம்: 1000 x 12 = 12000 ரூபாய்
மொபைல் கட்டணம்: 500  x 12 = 6000 ரூபாய்
சம்பளம்: 6000 x 12 = 72000 ரூபாய்
மொத்த செலவு: 90,000/- ரூபாய்
விளம்பர வருமானம்: 23,000/- ரூபாய்

கொங்குமலரின் சென்ற ஆண்டு விளம்பர வருமானம் 23000 ரூபாய் மட்டுமே. 67000 ரூபாயை சொந்த செலவில் செய்திருக்கிறோம். இது தான் கொங்குமலரின் வருமானக் கணக்கு. சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இல்லை என்று ஆதாரத்துடன் நிருபித்துள்ளோம். சொந்த பணத்தை செலவு செய்கிறீர்களே, நீங்கள் என்ன பெரிய கோடிஸ்வரரா? என்கிற கேள்வி உங்களுக்கு வரும். நிச்சயமாக இல்லை. பணம் இருப்பவர்களை விட, இல்லாதவர்கள் தான் அதிகமான சேவைகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. .

இதுவரை, எங்களை ஊக்குவித்த வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், இளைய தலைமுறையினர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், கல்லூரி பேராசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment