புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 12 மாதங்கள் ஆகிவிட்டது. தாலூக்கா அலுவலகத்தில் கேட்டால், சரியான முறையில் பதில் வரவில்லை. உடனே கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று ரேஷன் கார்டின் நிலையை பற்றிக் கேட்டேன். அவர்களும், ஆட்கள் விடுமுறையில் இருக்கிறார்கள். நாளை வந்து பாருங்கள் என்றனர். அடுத்த நாள் சென்றேன், "உங்கள் கார்டு, பிரிண்டிங் சென்றுள்ளது. 15 நாட்கள் கழித்து வாருங்கள்" என்றனர். 15 நாட்களுக்கு பின்னர், சென்று கேட்டால். ஹாலோ கிராம் வரவில்லை வந்தவுடன் கிடைக்கும் என்றனர். 60 நாட்களில் தரவேண்டிய ரேஷன் கார்டை வருடக்கணக்காக இழுத்து அடித்துவந்தார்கள். நேரடியாக கலெக்டரிடம் புகார் கூறினேன். கலெக்டரின் உடனடி நடவடிக்கையில் நிலுவையில் இருந்த ரேஷன் கார்டுகள் ரெடியாகிவிட்டன. தாலுக்கா அலுவலகங்களில் ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று எனக்கு தகவல் வந்தவுடன். ரேஷன் கார்டை வாங்கச் சென்றேன். என்னைப் போன்று பலர் ரேஷன் கார்டுக்காக காத்திருந்தனர். ரேஷன் கார்டை, கையெழுத்துப் போட்டு வாங்கும் போது, அதிகாரியின் உதவியாளர் ஒருவர் "சார், 300 ரூபாய் கொடுங்கள்" என்றார். நான் "எதற்காக 300 ரூபாய்" என்றவுடன். கொடி நாளுக்கு பணம் என்றார் அந்த உதவியாளர். சரி, ரசீதை கொடுத்தால் நான் தருகிறேன், இல்லையெனில் எனக்கு ரேஷன் கார்டே வேண்டாம். நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் வட்ட வழங்கல் பிரிவில் பெற்றுக்கொள்கிறேன் என்றேன்... உடனே அந்த உதவியாளர், சார் 200 ரூபாய்க்கு மட்டும் கொடி நாள் ரசீதை தருகிறேன் என்றார். சரி என்று 200 ரூபாயை கொடி நாளுக்கு நிதியாக கொடுத்து ரசீதை பெற்றுக்கொண்டேன். ரேஷன் கார்டையும் பெற்றுக்கொண்டேன். ஆனால், மற்றவர்கள் யாருமே ரசீதை வாங்காமல் பணம் கொடுத்து ரேஷன் கார்டை வாங்கினார்கள். லஞ்சம் வாங்கும் போது, வீடியோவை எடுத்து கலெக்டரின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளார்.
Article by www.kongumalar.com
ரசீதை கேட்பதற்கு, மக்கள் ஏன் தயங்குகிறார்கள்?.
ரசீதை வாங்காமல் கொடுத்தால் தான் லஞ்சம். ரசீதை கேட்காமல் இருப்பவர்களிடம், 300 ரூபாய் வாங்குகிறார்கள். ஏமாறுபவர்களிடம் மட்டும் தான் லஞ்சம் வாங்குகிறார்கள்.
ரேஷன் கார்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம், அதிகாரிகள் கேட்டால் உடனே புகார் தெரிவிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டரும் சொல்லித் தான் வருகிறார்.
ஆனால், பணம் கொடுத்தாவது, ரேஷன் கார்டை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள். பணம் கொடுத்தால் மட்டும், ரேஷன் கார்டை விண்ணப்பித்த இரண்டு நாட்களில் வந்துவிடுமா?. பணம் கொடுக்காதவர்களுக்கும் அதே காலம் தான், பணம் கொடுத்தவர்களுக்கும் அதே காலம் தான் ஆகும். பிறகு எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?. ரசீதை வாங்காமல், யார் பணம் கேட்டாலும் கொடுக்காதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஏன் வீணாக்குகிறீர்கள்?. லஞ்சமாக கொடுக்கும் பணத்தை, ஒருவருக்கு உதவி செய்தாலாவது புண்ணியம் கிடைக்கும்.
லஞ்சம் கொடுத்தால் தான், வேலை செய்வேன் என்கிறார்களா?.
சரி, நான் பணம் தருகிறேன் ரசீதை போட்டுக்கொடுங்கள் என்று சொல்லுங்கள். ரசீதை தர மறுக்கிறார்கள் என்றால். உடனே கலெக்டரின் நேரடி தொடர்பு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கிறார்கள் என்று கலெக்டருக்கு புகார் வந்தவுடன். கலெக்டர் நேரடியாக சென்று ஆய்வு செய்து. லஞ்சம் வாங்கிய பணியாளர்கள் 4 பேரை பணி இடை நீக்கம், 9 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளார். லஞ்சம் வாங்கினால், இது தொடரும் என்பதே எச்சரிக்கை.
No comments:
Post a Comment