ஈரோட்டில் அனல்பறக்கும் படை... ஈரோடு மாவட்டத்தையே அதிரவைத்துள்ளன.

 
இரண்டு ஓடையை மையமாக வைத்துத்தான் ஈரோடு என்று பெயர் பெற்றது. தண்ணீர் குறையாமல் இருந்துவந்த ஓடைகள், சாக்கடை நீரும், சாயக்கழிவு நீரும் கலந்து சென்னை கூவம் நதிபோல் காட்சியளித்து வந்தன. கடந்த நூறு நாட்களாக இடைவிடாத பணி, வெயில் மழையையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்பட்டு பெரும்பள்ளம் ஓடையை சுத்தம் செய்து காவேரி ஆற்றையே மிஞ்சும் அளவுக்கு ஓடையை மாற்றியிருக்கிறார்கள் ஈரோடை குழுவினர்.

Article by www.kongumalar.com

"நோய்களை குணப்படுத்தும் பணி மற்றுமே டாக்டர்களின் பணி இல்லை, நோய் வராமல் தடுப்பவர்கள் தான் டாக்டர்" என்று நிருபித்துள்ளார் டாக்டர் சுதாகர் கந்தசாமி. டெங்கு நோய் வருவதற்கு முன் ஓடையை சுத்தம் செய்துவிடலாம். இல்லையெனில் ஏராளமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்று ஓடையை 80 சதவீதம் சுத்தம் செய்துவிட்டார்கள். பெரும்பள்ளம் ஓடையை முழுவதுமாக சுத்தம் செய்து, அடுத்துதாக பிச்சக்காரன்பள்ளம் ஓடையை தொடங்கயிருக்கிறது ஈரோடை குழு.

டெங்கு நோய்கான விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு செல்ல 30.10.2015 (வெள்ளிக்கிழமை) அனல் பறக்கும் சூறாவளியாக விழிப்புணர்வு பேரணியை நடத்தினார்கள். ஈரோடு மாவட்ட கலெக்டர் பிராபகர் அவர்களும் விழிப்புணர்வை தொடங்கி வைக்க, செல்வா சேரிட்டபிள் பாரதி, மாநகராட்சி பணியாளர்கள், ஈரோடை குழுவினர்கள், கல்லூரி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் டெங்குவின் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

ஈரோடையை மாற்றிக்காட்டிய ஈரோடை இயக்கத்தினர்களான ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டேபிள் 211, ஈரோடு சிறகுகள், செல்வா சேரிட்டபிள் டிரஸ்ட், UNWO மஸ்ஜீத் சேவைக்குழு, சி.எஸ்.ஐ யூத் கிரிஸ்ட்டியன் கமிட்மெண்ட், ஒளிரும் ஈரோடு குழுவினர்களுக்கு ஈரோடு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லையெனில் இந்த மாற்றம் வந்திருக்க சாத்தியமில்லை. அதிகாரிகளுக்கும் நன்றிகள் பல.