சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பென்சிலை பயன்படுத்தாதவர்களே
இல்லை. பென்சிலை தயாரிக்க மரங்கள் வெட்டப்படுகிறது. மரங்களை வெட்டி சம்பாதிப்பவர்கள்,
மரங்களை வளர்க்க நினைப்பதில்லை. புதிதாக, ஒரு முயற்சியை பென்சில் நிறுவனம்
செய்துள்ளது. பயன்படுத்திய பென்சிலை மண்ணில் போட்டு வைத்தால், வீட்டுக்குத்
தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்ளலாம்.
Article © By: www.kongumalar.com
பென்சில் எப்படி காய்கறிகளைத் தரும்?.
நம்ம ஊர்களில் பென்சில் முனையில் ரப்பர் வைத்திருப்பார்கள். ஆனால்,
வெளிநாடுகளில் இருக்கும் சில பென்சில்களின் முனையில் ஒரு கேப்ஸ்யூல் மாத்திரை
போன்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. பென்சிலை பயன்படுத்திய பின்னர், மண்ணில்
போட்டால் சூரியகாந்திச் செடி, தக்காளி, மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகிய செடிகளில்
ஏதேனும் ஒன்று முளைக்க ஆரம்பிக்கும். பென்சிலை பயன்படுத்தி குப்பைத் தொட்டியில்
போடுவதற்கு பதில் மண்ணில் போட்டால் போதும், காய்கறிக்கு பஞ்சமிருக்காது
என்கிறார்கள் வெளிநாட்டில் வசிப்பவர்கள்.
அந்த பென்சிலை எப்படி தயாரிக்கிறார்கள்?.
நம்ம ஊர் பென்சிலில் ரப்பர் இருக்கும் இடத்தில் கேப்ஸ்யூல் வைக்கிறார்கள்.
தண்ணீருடன் விதைகளை கேப்ஸ்யூலில் அடைத்திருப்பார்கள். முளைப்பயிராக கேப்ஸ்யூலில் இருக்கும்.
பென்சிலை பயன்படுத்தும்போது அந்த கேப்ஸ்யூல் உடையாமல் இருக்க சில கோட்டிங்
செய்யப்பட்டுள்ளன. கேப்ஸ்யூலை மண்ணில் போட்டால், முளைப்பயிர் வெடிக்கத்தொடங்கி செடியாக
வெளிவரும்.
நம்ம ஊர்களில் இந்த பென்சில் இருக்கானு தெரியலை. ஆனால் நட்ராஜ்,
அப்சரா, கேம்லின் கம்பெனிகள் நினைத்தால் இதுபோன்று நம்ம ஊர்களிலும் விற்பனை
செய்யமுடியும். காய்கறிகள் வேஸ்ட் பென்சிலினால் ஆனது என்றால், காய்கறிகளின்
விலையாவது குறையும் அல்லவா.