ஈரோடு மாநகராட்சியில் அதிகரித்துவரும் விபத்துகள்


வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சாலைகள் ஒரு வழிச் சாலைகளாக மட்டுமே இருக்கிறது. ஒரு புறம் மட்டுமே வாகனம் செல்லும் சாலைகளில் இருபுறமும் செல்ல வேண்டிய கட்டாயம். இதனால் எந்தப்பக்கம் திரும்பினாலும் நெரிசல் என்ற நிலையில் ஈரோடு உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்ததில் இருந்து விபத்துகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குண்டும் குழியுமான ரோடும், குறுகிய சாலையும் தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம். அதுவும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால், டாஸ்மாக் கடையில் இருந்து நேராக மருத்துவமனை செல்பவர்களே அதிகம்.

முன்பெல்லாம், ஈரோடு அரசு மருத்துவமனைக்குள் போனால் மட்டுமே டாக்டரைப் பார்க்க முடியும். தற்போதைய சூழ்நிலையில், அரசு மருத்துவமனை (GH) ரவுண்டானா பக்கம் போனால் போதும், நேரடியாகவே டாக்டரை பார்க்க வேண்டிய நிலைமையில் மக்கள் உள்ளனர். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல், ரவுண்டானாவை உயிருடன் கடந்துவிட்டால் போதும் என்கிற அச்சத்துடனே வாகனகங்களை மக்கள் ஓட்டிச் செல்கிறார்கள்.

ரவுண்டானா பணிகள் தொடங்கி வேகமாக நடந்தபோது ஈரோடு மாநகரில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் தீர்ந்துவிடும் என்று நினைத்த மக்கள், இதுவே பெரிய பிரச்சனைக்குரிய பகுதியாகும் என்று நினைக்கவில்லை.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?.

1. ரவுண்டானா பணிகள் செய்ய பணம் இல்லைனா பரவாயில்லை. நான்கு பக்கமும் போலீஸ் அதிகாரிகளையாவது நிற்கச் சொல்லலாம். ஒரு பக்கம் மட்டும் தான் நெரிசலை சரி செய்கிறார்கள்.

2. ஈரோடு ஸ்மார்ட் சிட்டினு பந்தாவா சொன்னா மட்டும் போதுமா?. முதலில் ஈரோடு முழுவதும் தார் சாலையை போடுங்கள் போதும். விபத்துக்களை குறைந்தாலே போதும்.

3. ரவுண்டானாவே தான் வேண்டும் என்பது இல்லை. தற்காலியமாக, நான்கு பக்கமும் முன்பு இருந்தது போல், சிக்னல் இயக்கினால் போதும். போலீஸ் அதிகாரிகளே தேவையில்லை. ஆட்டோமெட்டிக் சிக்னல் என்றால் போக்குவரத்து நெரிசலை குறைய வாய்ப்புள்ளது.

தொடரும் நெரிசல், விபத்துகள், பயணிகளுக்கு மனஅழுத்தம் இவற்றை தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்?. எப்போது தீர்வு கிடைக்கும்?.

No comments:

Post a Comment