புதுதில்லியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனியில் 246 நிர்வாக அதிகாரி பணியிடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
அரசுத் துறை காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனியில் 246 நிர்வாக அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 40 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 21 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 60 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 125 காலியிடங்களும் உள்ளன. நிர்வாக அதிகாரி (பொது பிரிவு) பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டமும், நிர்வாக அதிகாரி (Specialist பிரிவு) பணிக்கு விண்ணப்பிக்க பி.காம் அல்லது எம்.காம் அல்லது சட்டத்துறையில் இளநிலைப் பட்டம் அல்லது மார்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ டிகிரி படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு எப்படி இருக்கும்?.
நிர்வாக அதிகாரி (பொது பிரிவு) பணிக்கு அப்ஜெக்ட்டிவ் முறையில் ஆன்லைன் தேர்வு இருக்கும். ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், பொது அறிவு, ஆப்டிட்யூட் மற்றும் விரிவாக விடையளிக்கும் தேர்வு ஆகிய பிரிவுகளுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 40 மதிப்பெண்கள் உள்ளன. ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், பொது அறிவு, ஆப்டிட்யூட் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 40 கேள்விகள், விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு 3 கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும்.
நிர்வாக அதிகாரி (Specialist) பணிக்கு அப்ஜெக்ட்டிவ் முறையில் ஆன்லைன் தேர்வு இருக்கும். ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், பொது அறிவு, ஆப்டிட்யூட், டெக்னிக்கல் மற்றும் விரிவாக விடையளிக்கும் தேர்வு ஆகிய பிரிவுகளுக்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், பொது அறிவு, ஆப்டிட்யூட் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மதிப்பெண்களும், டெக்னிக்கல் பிரிவு மற்றும் விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு 40 மதிப்பெண்களும் உள்ளன. ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், பொது அறிவு, ஆப்டிட்யூட் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 கேள்விகளும், டெக்னிக்கல் பிரிவுக்கு 40 கேள்விகளும், விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு 03 கேள்விகளும் இருக்கும். ஆன்லைன் தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஒரு தவறான விடைக்கு, மொத்த மதிப்பெண்களில் இருந்து 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கபடுவார்கள்.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இத்தேர்வுப் பயிற்சி நடைபெறலாம். பயிற்சியின் போது தங்குமிடம், போக்குவரத்து மற்றும் உணவுகளுக்கு ஏற்படும் செலவுகளை தன் சொந்த செலவிலேயே பார்த்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.orientalinsurance.orgஎன்கிற முகவரிக்குச் சென்று ”Apply online" பிரிவை கிளிக் செய்து பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, மொபைல் நம்பர் ஆகிய விவரங்களை குறிப்பிடவும்.
2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஸ்கேன் செய்த கையெழுத்தையும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/-, மற்றவர்களுக்கு ரூ.600/-
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.02.2015 - 20.03.2015
எழுத்துத் தேர்வு: மே மாதம் ஏதேனும் ஒரு தேதியில்.
மேலும் விவரங்களுக்கு: www.orientalinsurance.org
ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனியில் 246 அதிகாரி வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment