யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனியில் 684 உதவியாளர் பணியிடங்கள

சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனியில் 684 உதவியாளர் பணியிடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
அரசுத் துறை பொது காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சுரன்ஸ் கம்பெனியில் 684 உதவியாளர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில், தாழ்த்தப்பட்டோருக்கு 01 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 01 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 26 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 77 காலியிடங்களும் உள்ளன. அதேபோன்று, புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோருக்கு 01 காலியிடங்களும், ஒ.பி.சி பிரிவினருக்கு 01 காலியிடங்களும், பொது பிரிவினருக்கு 02 காலியிடங்களும் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு துறையில் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.
அப்ஜெக்ட்டிவ் முறையில் ஆன்லைன் தேர்வு இருக்கும். ரீசனிங், இங்கிலீஸ் லாங்குவேஜ், Numerical ability, பொது அறிவு, கம்ப்யூட்டர் அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் என,  மொத்தம் 250 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வில் விடை அளிப்பதற்கு 120 நிமிடங்கள் அளிக்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் computer proficiency தேர்வு நடத்தப்படும்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, தர்மபுரி, கும்பகோணம், மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர், ஈரோடு, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. www.uiic.co.in என்கிற முகவரிக்குச் சென்று ”Apply online" பிரிவை கிளிக் செய்து ”Click here for new registration" யில் பெயர், முகவரி, இ-மெயில் முகவரி, மொபைல் நம்பர் ஆகிய விவரங்களை குறிப்பிடவும்.
2. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஸ்கேன் செய்த கையெழுத்தையும் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு முன் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டணம்: தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75/-, மற்றவர்களுக்கு ரூ.450/-
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2014
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 02.12.2014
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: அடுத்த ஆண்டு ஜனவரி, முதல் வாரம்
மேலும் விவரங்களுக்கு: www.uiic.co.in

No comments:

Post a Comment