சாலைப் பாதுகாப்பு வாரம்னு கொண்டாடுபவர்களுக்கு சில கேள்விகள்?. சாலைப் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

சாலைப் பாதுகாப்பு வாரம்னு கொண்டாடுபவர்களுக்கு சில கேள்விகள்?....

சாலைப் பாதுகாப்பு வாரம்னு பேனர் வச்சி ரோடு ஓரங்களில் வைத்து விழாவாக கொண்டாடுகிறோம். சாலைப் பாதுகாப்பு என்றால் என்னவென்று தெரியாமலேயே கொண்டாடுகிறோமா?. விழிப்புணர்வு செய்வது மட்டும் தான் சாலைப்பாதுகாப்பா?.

Article by www.kongumalar.com

சாலைப் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

1. சாலையில் செல்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்றால் தரமான தார் சாலையாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலை குண்டும் குழியுமான தார்சாலை மட்டுமே. இதுதான் சாலைப் பாதுகாப்பா?.


2. நான்கு வழிச்சாலையாக இருந்தால் சிக்னல் அல்லது போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும்?. ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் 5 வழிச்சாலை. இதில் சிக்னல் இயங்கவில்லை, போலீஸ் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கமுடியவில்லை. இதுதான் சாலைப் பாதுகாப்பா?


3. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களை, என்ன செய்தோம்?. ஹெல்மெட் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு செய்தோமா?. போலீஸ் அதிகாரிகள் நினைத்தால், ஹெல்மெட் அணிய வைக்கமுடியாதா?.... 


4. எங்கு பார்த்தாலும், பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர். சாலைகளை மறைத்து வைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டன. போலீஸ் அலுவலகங்களில் பதிவு செய்யாமல், தார் சாலைகளில் பிளக்ஸ் பேனர்களை வைக்கக் கூடாது என்று அறிவிப்பு இருந்தால். நிச்சயம் பிளக்ஸ் பேனர்களின் எண்ணிக்கைகள் குறைக்க முடியும். 


5. ஒரு இடத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டால், காரணங்களை ஆராய்ந்து. விபத்துக்களை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தான் சாலைப் பாதுகாப்பு..... சென்னிமலை ரோடு ஜோசப் ஹாஸ்பிட்டல் அருகில் குறுகிய வளைவு, ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லை. இதுதான் சாலைப்பாதுகாப்பா?.

இதையெல்லாம், சாலைப் பாதுகாப்பு வாரங்களில் செய்திருந்தால். அதிகாரிகளுக்கு விருது கொடுத்து, பாராட்டுவதற்கு நாங்கள் தயார்......

No comments:

Post a Comment