தட்கல் முறையில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளின் கட்டணங்களை திடீரென ரயில்வே துறை உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 25.12.15 முதல் அமல்படுத்த உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தூங்கும் வசதி (SL) கொண்ட பெட்டிகளில், தட்கல் டிக்கெட்டுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.90 ஆக இருந்ததை ரூ.100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.175 ஆக இருந்ததை ரூ.200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
3-வது ஏ.சி.வகுப்புகளுக்கு தட்கல் கட்டணம் ரூ.250 லிருந்து ரூ.300 ஆகவும்
2-வது வகுப்பு ஏ.சி. எக்ஸிகியூட்டி வசதிகளுக்கு குறைந்தபட்ச தட்கல் கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரூ.100 வரை உயருகிறது. இந்த கட்டண உயர்வு, 25.12.15 முதல் அமலுக்கு வருகிறது.
குறிப்பு: இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
No comments:
Post a Comment