தமிழ்நாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஆயில் & நேட்சுரல் கேஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டெண்ட் டெக்னீசியன், ஜூனியர் அசிஸ்டெண்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
அசிஸ்டெண்ட் டெக்னீசியன் பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஜூனியர் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்புவோர் பி.காம்/ பி.எஸ்.சி (இயற்பியல்/ கணிதம்/ ஜியோலஜி) படிப்புடன் 30 ஆங்கில வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.
ஜூனியர் அசிஸ்டெண்ட் டெக்னீசியன் பணியில் சேர விரும்புவோர் வெல்டர், ஃபிட்டர், டீசல் மெக்கானிக், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், டர்னர், மோட்டார் மெக்கானிக், பாய்லர் அட்டன்டெண்ட் பாடப்பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அசிஸ்டெண்ட் டெக்னீசியன் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், கெமிக்கல், பெட்ரோலியம் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்புவோர் வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி நிலவரப்படி, பொதுப் பிரிவினர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது ஓ.பி.சி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2015
விவரங்களுக்கு
காரைக்கால் ஓ.என்.ஜி.சி:https://drive.google.com/file/d/0B3zUVLLHKD2qUXdmTFY4NW9hWE0/view?usp=docslist_api
No comments:
Post a Comment