நாங்களும் மரம் நடுகிறோம் என்று பல லைக்குகளை வாங்குவதற்காக இந்த விளம்பரம் செய்யவில்லை. மரம் நடுவதை விட, வளர்ப்பது தான் மிகப்பெரிய கஷ்டம். பல லட்சம் மரங்களை நட்டு குப்பையில் போட எங்களுக்கு மனசு இல்லை. அதனால், தற்போது 200 மரங்களை மட்டும் நட்டு வளர்த்தப்போகிறோம். 6 அடிக்கு மரம் வளரும் வரை, தண்ணீர் ஊற்றுவதற்காக ஒருவரை நியமித்துள்ளோம். மரம் நடுவது சாதனை இல்லை, மரம் வளரும் வரை பாதுகாப்பது தான் சாதனை.
மரங்களை எங்கு நடப்போகிறீர்கள்?
ஈரோடு மாவட்டம், நசியனூரில் இருக்கும் கந்தாம்பாளையம் கிராமத்தில் 200 மரங்களை நட உள்ளோம். ஊர் பொது மக்களும், பள்ளி மாணவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.
மரங்களை நடுவது யார்?.
ஈரோடு மாவட்டத்தில் 3500 மரங்களுக்கு மேல் நட்டு வளர்த்து வரும் ஈரோடு சிறகுகள் மற்றும் குழுவினர்கள் தான் மரங்களை நடவுள்ளார்கள்.
பராமரிப்பது யார்?.
வெளிநாடு சென்றால், சொந்த ஊரை மறக்கும் நண்பர்களுக்கு மத்தியில் ஒருவர் தன் ஊரை பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு வருகிறார். அவர் தான், சிவக்குமார். கந்தாம்பாளையத்தில் நடப்படும் 200 மரங்களுக்கும் தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்புக்கு ஒருவரையும் நியமித்திருக்கிறார்.
நேரம் மற்றும் நாள்:
9 ஆகஸ்ட், 2015 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12.30 வரை.
நிகழ்ச்சி நடைபெறும் இடம்: கந்தாம்பாளையம் அரசுப்பள்ளி
சிறப்பாக மரம் நடும் பணியில் ஈடுபவர்களுக்கு பெருந்துறை ஹாசம் நிறுவனம் வழங்கும் விருதும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது.
கலாம் கனவு மெய்பட வாருங்கள்.
இப்படிக்கு,
கொங்குமலர்.காம்
No comments:
Post a Comment