மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயா சங்கதன் (Kendriya Vidyalaya Sangathan), நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti) மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (Central Teacher Eligibility Test(CTET) வரும் செப்டம்பர் தேதியில் நடத்தப்பட உள்ளது.

மத்திய பாடத்திட்ட அமைப்பான சிபிஎஸ்இ(Central Board of Secondary Education) இத்தேர்வை நடத்துகிறது.

மத்திய அரசு பள்ளிகளில் தவிர சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் ஆங்கில வழி பள்ளிகளுக்கும் CTET தேர்வு பொருந்தும்.

* CTET தேர்வு 2 தாள்களை கொண்டதாகும்.

தாள் - 1 ல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.

தாள் - II ல் தகுதி பெறுபவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு போன்ற இரு பிரிவுகளிலும் பணிபுரிய விரும்புபவர்கள் இருபகுதி தேர்வு தாள்களிலும் (தாள் I மற்றும் தாள் II) தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தாள் - I அல்லது தாள் - II என்ற ஏதாவதொரு தேர்வுக்கு, பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600-ம் எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300-ம் கட்டணமாக பெறப்படும்..

தாள் - I மற்றும் தாள் - II என்ற இரு தேர்வுகளுக்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000-ம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் வழி டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம் அல்லது சலானைப் பயன்படுத்தி Secretary, Central Board of Secondary Education, Delhi என்ற பெயருக்கு CBSE கணக்குக்கு Syndicate Bank, HDFC வங்கியில் செலுத்த வேண்டும்.

செப்டம்பர் 20-ம் தேதி தேர்வுகள் நடைபெறும். இரு தேர்வுகளும் 2.30 மணி நேரம் நடத்தப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 20, 2015

மேலும் விவரங்களைப் பெற www.ctet.nic.in 

No comments:

Post a Comment