(வேதியியல், பாலிமர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, இயற்பியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது ஃபுட் டெக்னாலஜி, பயோ-மெடிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், மெட்டலர்ஜி, டெக்ஸ்டைல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி ) கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையில் 459 காலியிடங்கள்

இந்திய தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையில் 459 Examiner of Patents & Designs பணிகளில் சேர விரும்புவோர் வேதியியல், பாலிமர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, பயோடெக்னாலஜி, இயற்பியல் பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் அல்லது ஃபுட் டெக்னாலஜி, பயோ-மெடிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், சிவில், மெட்டலர்ஜி, டெக்ஸ்டைல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி, 21 லிருந்து 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். 

எழுத்துத் தேர்வு எப்படி நடைபெறும்?.

எழுத்துத் தேர்வு மூலம் நடைபெறும் இந்தத் தேர்வில் Preliminary examination மற்றும் Main examination என இரண்டு தேர்வுகள் உள்ளன. Preliminary தேர்வில் ஜெனரல் இங்கிலீஷ், ஜெனரல் சயின்ஸ், வெர்பல் & நான்-வெர்பல் ரீசனிங், ஆப்டிட்யூட், பொது அறிவு & நடப்பு விவரங்கள் ஆகியவை குறித்து மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வு எழுத இரண்டு மணி நேரம் வழங்கப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று Preliminary தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
இத்தேர்வில் தேர்ச்சியானவர்களை அடுத்த கட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் பேப்பர் 1, பேப்பர் 2 என இரண்டு தேர்வுகள் உள்ளன. பேப்பர் 1 தேர்வில் Descriptive கேள்விகள் இருக்கும். 300 மதிப்பெண்கள். உள்ளன. இத்தேர்வை எழுத 3 மணி நேரம் வழங்கப்படும். பேப்பர் 2 தேர்வில் Comprehension, Short essay, Usage & Vocabulary, Report Writing and Precis Writing ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் உள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி அன்று மெயின் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இத்தேர்வை எழுதலாம். இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களை, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்களை பணியில் அமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்பிப்பது எப்படி?.

 www.recruitmentnpc.in என்கிற இணையதளத்திற்குச் சென்று "Apply Online" எனும் பிரிவை கிளிக் செய்து சரியான இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் நம்பரை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200/-. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. அத்துடன், வங்கிகளில் சேவைக் கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான முறைகள் குறித்து இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கட்டணங்களை செலுத்த கடைசி தேதி: 24.08.2015

விண்ணபதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015

Notification: 

No comments:

Post a Comment