அடேங்கப்பா!!! இதிலையும் தமிழ்நாடு தான் நம்பர் 1, அதிர்ச்சியூட்டும் தகவல்..


பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அருகில் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு முதலிடம் தமிழ்நாடு தான் என்று நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பிரோ வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு நிலவரப்படி
தமிழ்நாடு – 1011 விபத்துகள்
உத்தரபிரதேஷம் – 969 விபத்துகள்
கர்நாடகா – 493 விபத்துகள்
மகாராஷ்ட்ரா – 491 விபத்துகள்
ஆந்திர பிரதேஷம் – 373 விபத்துகள்
மத்தியபிரதேஷம் – 354 விபத்துகள்
குஜராத் – 288 விபத்துகள்
கேரளா – 224 விபத்துகள்.

ஒயின்ஸ்ஷாப் எண்ணிக்கையில் தான் தமிழகம் முதல் இடம் என்று நினைக்க வேண்டாம். விபத்திலும் நம்ம தான் முதல் இடம்.

சென்னையில் மட்டும் 2014 ஆம் ஆண்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் 98 விபத்துகள் நடந்துள்ளன. கோவையில் 18 விபத்துகள் நடந்துள்ளதாம். 

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் நேரம் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை. அந்த நேரங்களில் தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகிறது. சில பள்ளிகளில் தாமதமாக சென்றால், குழந்தைகளை கேட்டின் முன் நிற்க வைத்துவிடுகிறார்கள். அதன் காரணமாகவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேகமாக அழைத்துச்செல்கிறார்கள். அந்த சமயம் விபத்துகள் நேரிடம் வாய்ப்பு.

எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

பள்ளிக்குச் செல்லும் நேரங்களில் தான், அலுவலக நேரங்களும் உள்ளது. அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

கல்லூரி மாணவர்கள், இரு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டுவதும் ஒரு காரணம்.

ஹெல்மெட் போட்டு, வண்டியை ஓட்டுங்கப்பா. இல்லைனா, இந்த வருடமும் நம்ம தமிழ்நாடு தான் முதலிடம்... உயிர் போனா வாங்க முடியாதுனு, உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறோம்...






No comments:

Post a Comment