லட்சணக்கான மரங்களை நட்டோம், இப்ப ஆயிரக்கணக்கில் தான் இருக்குதுங்க? யாரவது பார்த்தீங்களா?.


ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் அன்று நிறைய சேவைகளை செய்கிறோம். அதில் ஒன்றுதான், மரம் நடுதல்.  பிறந்தநாள் அன்று லட்சக்கணக்கான மரங்களை நடுவோம். ஒரு வாரத்தில் தினசரி பத்திரிக்கையில் அவர் மரம் நட்டார், இவர் மரம் நட்டார் என்று நிறைய போட்டோக்களுடன் செய்திகள் வரும். படித்திருப்பீர்கள்?. வெறும் போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுத்து மரங்களை நடத்தெரிந்த நமக்கு. மரத்துக்கு தண்ணீர் ஊற்ற தெரியலையே. அத்தனை மரங்களும், உயிருடன் இருக்கிறதா?. தண்ணீர் இல்லாமல், லட்சக்கணக்கான மரங்கள் செத்துக்கிடக்கிறது. அந்த மரங்களை, இப்படி குப்பையில் போடாமல். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மரத்தை இலவசமாக கொடுக்கலாமே. மூன்று வருடங்களில் கோடிக்கணக்கான மரங்களை நட்டோம் என்று சொல்வதற்கு பதில் தண்ணீர் ஊற்றி அத்தனை மரங்களையும் உயிருடன் வளர்த்தியிருக்கிறோம் என்று சாதனை வரிகளில் எழுதுங்கள்.

கொங்குமலரில்.காம்

இப்படியும் செய்யலாமே?.
ஒரு விவசாய நிலத்தில் இருக்கும் மரங்களை கொன்று, பிளாட் போட்டு விற்கத் தெரிந்த நமக்கு. ஒரு மரம் நடுவதற்கு நேரம் இல்லை பாருங்கள்?. இனிமேல், 1500 சதர அடியில் யார் வீடு கட்டினாலும், ஒரு மரத்தை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும் என்று உத்தரவு போடுங்கள். அப்படி செய்தால் மட்டுமே, குடிநீர் இணைப்பு என்று சொல்லுங்கள். மரம் வளர்ப்போம், பசுமையான கேரளா மாநிலத்தைப் போன்று தமிழகத்தையும் மாற்றுவோம். இது நம்மால் மட்டுமே முடியும்.

 


No comments:

Post a Comment