ரேஷன் கடைகளில் இந்தப் பொருளை கொடுங்கள், உணவு பொருட்களின் விலை குறையும்

ரேஷன் கடைகளில் இலவச அரிசி, குறைந்த விலையில் சர்க்கரை, ஆயில் என நிறைய பொருட்கள் கிடைக்கிறது. மானியத்துடன் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் பிராடெக்ட் (Product) மட்டும் தான். Raw material விலை குறைந்தால் Product விலையும் குறைய வாய்ப்புகள் இருக்கும். அரிசியை தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்று விவசாயிடம் கேட்டுப்பாருங்கள். விவசாயத்தில் லாபமே இல்லை. பூமியை விற்கப்போகிறேன் என்பார். ஏன், அவர்களுக்கு இந்த சூழ்நிலை?. விவசாயம் குறைந்தால் நம் எதிர்காலம் என்ன?.

இப்படிச் செய்யலாமே? (சிறப்பாக வழிநடத்தி வரும் அரசுக்கு, ஒரு வேண்டுகோள்)

ரேஷன் கடைகளில் மானியத்துடன் அல்லது இலவசமாக விதைகளை கொடுக்கலாமே. விவசாயம் செய்பவர்களுக்கு விதைகளின் விலை தான் மிகப் பெரிய சுமையாக இருக்கிறது. முடிந்தால் உரங்களுக்கும் மானியத்தை அதிகரித்து கொடுங்கள். விவசாயம் நன்றாக இருந்தால் தான், எதிர்காலத்தில் நமக்கு உணவு..

No comments:

Post a Comment