கல்லூரியில் 100 சதவித வேலை வாய்ப்புகள் வாங்கித் தருகிறோம்னு எழுதி கொடுப்பாங்களா?. நாங்கள் தயார்!

பனிரெண்டாவது படித்திக்கொண்டிருக்கிறான், அவனது தந்தை மூன்று மாதத்திற்கு முன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அம்மா, கூலி வேலை செய்துவருகிறாள். அம்மாவுக்கு ஒரு ஆசை, "தன் மகனை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்து என்ஜினீயராக படிக்க வைக்க வேண்டும் என்று". ஏன், தன் மகனை பனிரெண்டாவது முடித்தவுடன் வேலைக்கு அனுப்ப நினைக்காமல், கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறாங்க?. தன் மகனும் என்ஜினீயர் என்று பெருமையுடன் சொல்லும் போது. கஷ்டத்திற்கு நடுவில், அது ஒரு தனி சுகம். என்ஜினீயரிங் படித்தால் போதுமா?. வேலை வாங்கினால் தான், அம்மாவின் ஆசை நிறைவேறும். இந்த ஒரு குடும்பம் மட்டும் இல்லை, நிறைய குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்காக சிறிய உதவியை செய்ய இருக்கிறோம்.  

ஏன், என்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைப்பதில்லை?.

தமிழ்நாட்டில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. கல்லூரிக்கு இணையான தொழிற்சாலைகள் இல்லை. ஐ.டி நிறுவனங்கள் இருந்தாலும், நிரந்தர வேலை இருக்குமா என்கிற சந்தேகம்?. ஆகவே, வேலை வாய்ப்பற்ற மாணவர்களுக்காக இலவச உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கிய கொங்குமலர், தற்போது ஒரு கல்லூரியிடம் இணைந்து ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யத் தொடங்கியுள்ளோம். 

1. தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி) மற்றும் பழங்குடியின (எஸ்.டி) மாணவர்களுக்கு இலவச கல்வி. (100 மாணவர்களுக்கு மட்டும்)

2. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்லூரிக் கட்டணத்தில் சலுகைகள். (அனைத்து முதல் பட்டதாரிகளுக்கும்). 

3. "100 சதவித வேலை வாய்ப்புக்கு நாங்கள் உத்தரவாதம்" என்று எழுதி தர கல்லூரி முன்வந்துள்ளது. மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம். " மாணவர்கள் கல்லூரியில் அரியர் இல்லாமல், வேலை வாய்ப்புக்கான தகுதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்". கல்லூரியில் வாரம் ஒரு நாள் வேலை வாய்ப்புக்கென்றே இலவச டிரெய்னிங் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது கொங்குமலர்.

கல்லூரியைப் பற்றி?.

ஈரோட்டில் இருந்து 18 கி.மீ பயணம் செய்தால் வருகிறது தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் நகரமான பெருந்துறை. பெருந்துறை பேருந்து நிலையத்தில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் ஆறு கிலோமீட்டர் பயணித்தால் ஈங்கூர் ரயில்வே பாலம் வருகிறது. பாலத்தை கடந்தவுடன் சாலையின் வலது (RIGHT) பக்கத்தில் இருக்கிறது வித்யா மந்தீர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி. 


2011 ஆம் ஆண்டு டாக்டர்கள், கல்லூரி முதல்வர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பேராசிரியர்களால் தொடங்கப்பட்டது. 

அனுபவம் வாய்ந்த முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் தொடங்கப்பட்ட கல்லூரி என்பதால். இங்கு மாணவர்களின் கல்விக்கு குறைகள் இருக்க வாய்ப்பில்லை. ஈங்கூரை சிறப்பாக வழிநடத்தி வந்த ஈ.வி.எம்.நடராஜமூர்த்தி, B.Sc.,MA,CA. கல்லூரியையும் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். எந்த கல்லூரியிலும் இல்லாத ஒரு விஷயம் இந்த கல்லூரியில் உள்ளது. கல்லூரி முதல்வர் என்றால் காலை 08 மணியிலிருந்து மாலை 04 மணி வரை மட்டும் தான் இருப்பார்கள். ஆனால், இந்த கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணன் 24 மணி நேரமும் மாணவர்களுக்காக கல்லூரியிலேயே இருந்து வருகிறார். காலை 08 மணியிலிருந்து மாலை 05 மணி வரை கல்லூரி சம்பந்தப்பட்ட வேலைகள். அதற்குப் பின்னர், இரவு 12 மணி வரை மாணவர்களின் வேலை வாய்ப்புக்குத் தேவையான பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார். சேவை நோக்கத்துடன் தொடங்கிய கல்லூரி என்று முதல்வரின் நடவடிக்கைகளை பார்த்தவுடன் உறுதி செய்து, கொங்குமலரும் இணைந்துள்ளது. 

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன.

1. Wi-Fi  (10 Mbps) கேம்பஸ்

2. 520 கம்ப்யூட்டர்களுடன் லேப் வசதி. 

3. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி செமினார் அறை.

4. 15,000க்கும் மேல் புத்தகங்கள், 500க்கும் மேல் டி.வி.டி க்கள், 85க்கும் மேல் சர்வதேச பத்திரிக்கைகள் என ஒரு தனி அறை உள்ளது. மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். 

5. 65,000 சதுர அடியுடன் கூடிய விளையாட்டு மைதானம்.

6. கல்லூரியில் மொத்தம் 96 உதவிப் பேராசிரியர்களும், 09 இணைப் பேராசிரியர்களும், 04 பேராசிரியர்களும் உள்ளனர். 

7. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஹாஸ்டல் வசதி. சைவம் மற்றும் அசைவ உணவுகளும் ஹாஸ்டலில் வழங்குகின்றனர். ஹாஸ்டலில் பெண்களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்களை தங்க வைத்துள்ளனர். ஹாஸ்டலில் 24 மணி நேர இன்டர்நெட் வசதியையும் செய்துள்ளனர். 

எந்த துறைகளுக்கு அட்மிஷன்?.

இளநிலைப் படிப்புகள்

1. பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்)

2. பி.இ (எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்)

3. பி.இ (எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ்)

4. பி.இ (மெக்கானிக்கல்)

5. பி.டெக் (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி)

முதுநிலைப் படிப்பு

எம்.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ்)

மேலும் அட்மிஷன் சம்பந்தப்பட்ட உதவிகளுக்கு கொங்கு மலரின் உதவி நம்பருக்கு அழைக்கலாம். 

உதவிக்கு : 7402291000


No comments:

Post a Comment