எனக்கு ஆங்கிலம் தெரியாது. சம்பளம் குறைவாக இருந்தாலும், ஒரே நிறுவனத்தில் 50 வருடம் வேலை செய்தனால் தான். அந்த நிறுவனத்துக்கே தலைவர் ஆக முடிந்தது


ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றால். சரியான நேரத்தில் சென்று வந்தால் போதுமா?. அப்படி இருந்தால் சாதிக்க முடியுமா?. நீங்களும் ஒரு பெரிய அதிகாரி ஆக வேண்டும் அல்லவா?. இவரின் கதையை படித்துப் பாருங்கள்.
எல் அண்டி டி நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.நாயக் கடந்த மார்ச் 15-ஆம் தேதியுடன் அந்த நிறுவனத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்திருக்கிறார். தற்போது 73 வயதாகும் நாயக் 1965-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி எல் அண்ட் டி நிறுவனத்தில் இணைந்தார். 

இவரைப் பற்றி
குஜராத்தின் ஒரு கிராமத்தில் பிறந்த நாயக் மெக்கானிக் என்ஜினீயரிங் முடித்தார். 
எல் அண்ட் டி நிறுவனத்தில் பணி புரிவது தான் இவரது இலக்காக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் எல் அண்ட் டி நிறுவனத்தில் ஐ.ஐ.டி யில் படித்தவர்களை மட்டுமே வேலைக்கு எடுத்ததால். முதலில் நெஸ்டர் நிறுவனத்தில் சேர்ந்தார். 
இவரது ஆங்கிலம் அவ்வளவு பிரமாதமாக இருக்காது என்பதால், பிறர் ஆங்கிலத்தில் பேசுவதை குஜராத்தி மொழியில் புரிந்துகொண்டு, குஜராத்தியில் அதற்கான பதிலை யோசித்து, பின் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசி தன்னுடைய ஆரம்ப காலத்தைக் கழித்திருக்கிறார்.
பிறகு, தன்னுடைய கனவு நிறுவனமான எல் அண்ட் டிக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வுக்கு பிறகு மாதம் ரூ.760 சம்பளத்துக்கு வேலை கிடைத்தது. ஆனால் உயரதிகாரியிடம் பேசும்போது அதீத தன்னம்பிக்கையில் பேசியதால் ரூ.760 என்பது ரூ.670 ஆகக் குறைந்தது. இருந்தாலும் கனவு நிறுவனத்தை விடாமல் பிடித்துக்கொண்டார். பணியில் சேர்ந்தபின் முதல் 21 வருடங்களில் அவர் எந்த விடுமுறையும் எடுத்ததில்லை. வாராந்திர விடுமுறை கூட எடுக்காமல் பணிபுரிந்தார். 
1974-ல் (ஒன்பது ஆண்டுகளுக்குள்) துணை பொது மேலாளராக பதவி உயர்வு பெற்றார். ஆனால் 1968-ஆம் ஆண்டு எவ்வளவு தூரம் எல் அண்ட் டி யில் பதவி உயர்வு பெற முடியும் என்று யாராவது என்னிடம் கேட்டிருந்தால் பொது மேலாளர் என்று தான் சொல்லி இருப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். 
1974 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தில் எனக்கு பெரிதாக எந்த வளர்ச்சியும் இல்லை. சமயங்களில் வெறுப்பு வரும், ஆனாலும் நிறுவனத்துக்காக என்னை அர்ப்பணித்துக்கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்தக் காலத்தில் பல நிறுவனங்களில் இருந்து இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் எல் அண்ட் டி போல வாய்ப்பு கிடைக்காது என்பதால் எந்த ஒரு நேர்காணலுக்கும் செல்லவில்லை. 
தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் வேலையாக, எல் அண்ட் டி யை இளைஞர்களைக் கவரும் நிறுவனமாக மாற்றினார்.
அதன்பிறகு பல கிளை நிறுவனங்களை உருவாக்கி அவற்றுக்கு தனியாக தலைவர்களை நியமித்தது. பங்குதாரர்களுக்கு ஏற்ற நிறுவனமாக மாற்றியது என கடந்த ஐம்பது வருடங்களில் இவர் செய்தது ஏராளம்.
யார் ஒருவன் ஒரு நாளில் தன்னை நான்கு முறை கொலை செய்யத் தயாராக இருக்கிறானோ, 100 வருட உழைப்பைக் கொடுக்க தயாராக இருக்கிறானோ, குடும்பத்தை மறந்துவிட்டு தன்னுடைய 60 சதவித நேரத்தை நிறுவனத்துக்கு செலவழிக்கிறானோ அவன்தான் எனக்கு பிறகு என் இடத்துக்கு வரத் தகுதியான நபர் என்று தெரிவித்திருக்கிறார். 
ஐம்பது வருடத்துக்கு வாழ்த்து தெரிவித்த பத்திரிக்கையாளரிடம், இத்தனை வருடங்களில் அதிக விடுமுறை எடுக்காமல் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்திருப்பதால் நான் கொடுத்திருப்பது 100 வருட உழைப்பு என்று பதில் அளித்திருக்கிறார்.

Source: the hindu and wikepedia


No comments:

Post a Comment