கெமிக்கல் இன்ஜினியரிங்


முன்பு தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்டிருந்த தனியார் கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை இருக்கவில்லை. இன்றைய நிலையோ வேறு. பல தனியார் பொறியியற் கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங்கும் அதனைச் சார்ந்திருக்கும் துறைகளும் அமைந்திருக்கின்றன.

பிற பொறியியற் பிரிவுகளைப் போன்றே கெமிக்கல் இன்ஜினியரிங் துறையும் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளின் மீதே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இத்துறைக்குக் குறிப்பாக கெமிக்கலின் பங்களிப்புச் சற்று அதிகமானது.

இத்துறையில் படித்து முடித்தவர்கள் மூலக்கூறுகளையும் (molecules) அவற்றின் வேதிவினைகளையும் (reactions) ஆராய்ந்து பயனுள்ள புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும், பொருட்களை ஆய்வுக் கூடத்தில் இருந்து எடுத்துப் பெருமளவில் நுகரக்கூடிய அளவில் பன்மடங்கு உற்பத்தி செய்ய உதவுவது வேதிப்பொறியியலும், கெமிக்கல் இன்ஜினியர்களும் தான்.

கெமிக்கல் இன்ஜினியரிங் இன்று பல திசைகளிலும் கிளை பரப்பியிருக்கும் ஒரு அகன்ற துறை.

அது என்ன அகன்ற துறை?. சரி பார்போம்.

நமது நாளொன்றைக் கருத்தில் கொள்வோம். காலை எழுந்து சற்றே சோம்பல் முறித்துவிட்டுக் குளியலறைக்குள் செல்வோம். அங்கே பல் துலக்கப் பயன்படுகிற பசையில்(பேஸ்ட்டு) இருந்து குளிக்கும் போது பயன்படும், சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், லோஷன் போன்ற சகல தைலங்களும் களிம்புகளும் வேதிப் பொருட்களே. நல்ல மென்மையான துண்டில் ஈரத்தைத் துவட்டிக் கொள்கிறீர்களா? அதிலே அழகான படமோ, வடிவோ, வண்ணமோ இருக்கிறதா? அவற்றை உருவாக்கப் பயன்பட்ட சாயங்களும் வேதிப்பொருட்களே.

தலைவாரப் பயன்படும் சீப்புக் கூட ஒரு (பிளாஸ்டிக்) பொருளினால் செய்யப்பட்டிருக்கும்.

காலையில் உட்கொள்ளும் உணவு முதல், நாள் முழுதும் உட்செலுத்தும் உணவு, தீனி, வெவ்வேறு வித பானங்கள் என்று எல்லாவற்றிலும் கெமிக்கல் பொருளின் நுட்பங்களும் நிறைந்திருக்கும். உணவுச்செலுத்தத் தொழில்முறை (food processing industry) கூட கெமிக்கல் துறையின் ஒரு உட்பிரிவு தான்.

ஆற்று நீரைச் சுத்தப்படுத்தி மாசகற்றிக் குடிநீராகப் பதப்படுத்தித் தருவதாக இருந்தாலும், கடல்நீரைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி அங்கு செலுத்தங்கள் அனைத்தும் கெமிக்கல் இன்ஜினியரிங் அடியே.

உடல் நோயகற்றும் மருந்துகளைக் கண்டுபிடிப்பதில் வேதியல், உயிர்வேதியல், உயிரியல் போன்ற துறைகளுக்குப் பங்கிருந்தாலும், அவற்றைப் பெரிய அளவில் தயாரிப்பதை கெமிக்கல் இன்ஜினியரிங் பார்த்துக் கொள்கிறது. நொதித்தல் (fermentation) நுட்பங்கள் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படும்.

வீட்டை விட்டு வெளியில் கிளம்பி வாகனங்கள் மூலம் செல்கிறோம். அந்த வாகனத்தை இயக்குவதற்கு ஆதாரமாக இருக்கும் எரிபொருட்கள் தயாரிக்கப்படுவதும் கெமிக்கல் இன்ஜினியரின் விள்ளெடுப்பு (refining) மற்றும் துளித்தெடுப்பு (distillation) நுட்பங்கள் மூலம் பெட்ரொல்,மண்ணெய், டீசல், என்று பிரித்தெடுத்தத் தருவதும் கெமிக்கல் இன்ஜினியரிங் தான். ஒரு மாட்டுவண்டியில் சென்றால் கூட அதன் சக்கரங்கள் எளிதாய் எதிர்ப்பின்றிச் சுழல க்ரீஸ் பயன்படுத்துவோமே. இப்படி மாட்டு வண்டிகள் முதல் எறிபறனைகள் (jet planes) வரை இயங்குவதற்கான ஆதாரமாகவோ ஒத்தாசை புரிவதாகவோ இருப்பதும் கெமிக்கல் இன்ஜினியரிங் தான்.

இன்று, சதா செல்லமாய்ச் சிணுங்குகின்ற செல்பேசிகள் கூட எடை குறைவாய் ஆகிக் கொண்டிருப்பதற்கு அவற்றைத் தயாரிக்க உதவும் ப்ளாஸ்டிக் பொருட்களும் வேதிப்பொறியியலைச் சார்ந்தது.

தற்போது கெமிக்கல் இன்ஜினியர்கள் எதிர்காலத்தில் சுற்றுச்சுழல் மாசுபடுவதை தடுப்பதற்க்காக கடும் முயற்சி செய்துவருகின்றார்கள்.

வேலை வாய்புகள் எப்படி

பொருட்களை உருவாக்குவதற்கும்,வடிவமைப்பதற்கும்,உபகாரணங்களை கட்டுவதற்கும்,அதில் பணியாற்றுவதற்கும், கெமிக்கல் இன்ஜினியரிங் சம்பந்தமான தொழிற்சாலைகளில் வேலை வாய்புகள் ஏராளம்.

அதிகமாக கெமிக்கல் இன்ஜினியர் சோப்பு,பெயிண்ட்,ப்ளாஸ்டிக்,சிமெண்ட்,எண்ணை சுத்திகரிப்பு,மருந்துப் பொருட்கள் மற்றும் பல தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றார்கள்.

தயாரிப்பதற்கும்,கண்டுபிடிப்பதற்கும் திறமை உள்ளவர்கள் நிர்வாகியாகவும்,ப்ராஜெக்ட் தலைவராகவும்,தொழில் சார்ந்த யோசனையாளராகவும்.பணிபுரிய வாய்புகள் உள்ளது.

தொழ்ற்சாலைகளை விரிவாக்கம் செய்துவருவதனால் படித்து முடிப்பவற்களுக்கு பிரகாசமான வாய்புகள் காத்திருக்கின்றது.

கெமிக்கல் இன்ஜினியர்கள் முன்னனி நிறுவனத்தில் அதிக வருமானம் பெற்று வருகிறார்கள்.

தற்போது CEO பதவியில் இருந்து அதிக வருமானம் பெற்றுவரும் கெமிக்கல் இன்ஜினியர்களின் நிறுவனம் உங்களுக்காக DU PONT,GENERAL ELECTRIC,DOW CHEMICAL,EXXON,BASF,GULF OIL, TEXACO,B.F GOOD RICH, மற்றும் RELIANCE.

எல்லோரும் அம்பானியைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.ஆனால் அம்பானியை நல்ல கொண்டுவந்ததும் கெமிக்கல் துறை தான்.அது மட்டும் இல்லாமல் உலக கோடிஸ்வரரில் ஒருவரான முகேஷ் அம்பானியும் கெமிக்கல் இன்ஜினியர் என்பது பலரும் அறிந்திடாத விஷயம்.

கெமிக்கல் துறையில் எப்படி சேருவது

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், பி.டெக் கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புபவர்கள்.அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் விண்ணப்பித்து அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் சேரலாம், அல்லது நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு டிப்ளமோவில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் கெமிக்கல் துறையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இன் கெமிக்கல் இன்ஜினியரிங் தேர்தெடுத்துப் படிக்கலாம்.பிறகு டிப்ளமோ முடித்துவிட்டு இன்ஜினியரிங் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.இதற்கான கவுன்சிலிங் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடக்கும்.

தமிழ்நாட்டில் முதுகலைப்பட்டம் படிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் TNPSC தேர்வு எழுத வேண்டும்.வேறு மாநிலங்களில் படிப்பதற்கு GATE தேர்வு எழுத வேண்டும். வெளிநாட்டில் படிக்க GRE தேர்வு எழுத வேண்டும்

No comments:

Post a Comment