சென்னை மக்களுக்கு இலவச தொலைபேசி சேவை....

கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ஒரு வாரம் இலவச சேவை வழங்கப்படும் என மத்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இந்த வசதி இன்று முதல் அமலுக்கு வருகிறதாம். இதேபோன்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல், தனது சென்னை வாடிக்கையாளர்களுக்கு 30 ரூபாய்க்கு 'டாக் டைம்' வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த சலுகை வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது கழித்துக் கொள்ளப்படும். இதேபோல 'போஸ்ட் பெய்ட்' வாடிக்கையாளர்கள் இரு நாட்கள் 10 நிமிடம் இலவசமாக பேசி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும், 50 எம்.பி. இலவச இன்டர்நெட் டேட்டாவும் அளித்துள்ளதாம்.

No comments:

Post a Comment