நம்ம பண்ணுகிற முதல் தவறே அடுத்தவர்களின் ரெஸ்யூமை கட் காப்பி பேஸ்ட் செய்வது தான். என்ன செய்வது அவசரத்தில் ரெஸ்யூம் வேண்டுமே. உங்களுக்கு தெரியுமா?. ஒரு பொருளை விற்க வேண்டும் என்றால், மார்கெட்டிங் செய்கிறோம். நல்ல வேளை கிடைக்காமல், அலைந்து திரிந்து மார்கெட்டிங் செய்வதற்கு பதில். நல்ல வேளை கிடைக்க மார்கெட்டிங் முறையை பயன்படுத்த தவறு இல்லையே. அதற்கு வேண்டிய முக்கியமான ஒன்று, ரெஸ்யூம் மூலம் எம்ப்ளாயர்களை கரெக்ட் செய்யும் மார்கெட்டிங் முறை தான். அந்த ரெஸ்யூமை எப்படி தயார் செய்வது?
1. ரெஸ்யூமில் MS Outlook, Emailing, Internet போன்ற விஷயங்கள் எனக்கு தெரியும் என்று எழுத வேண்டாம்.
2. Correspondence details யில் "cell phone" or "landline" என்று எழுத வேண்டாம். இ-மெயில் முகவரி எழுதும் போது email: xyz@gmail.com என்று எழுதுவதற்கு பதில் எடுத்துக்காட்டாக
Kongumalar,
35, Railway Station Road,
Erode – 638002.
+917402291000
puthiyathalaimurai.karthik@gmail.com
என்று ரெஸ்யூமில் எழுத வேண்டும்.
Kongumalar,
35, Railway Station Road,
Erode – 638002.
+917402291000
puthiyathalaimurai.karthik@gmail.com
என்று ரெஸ்யூமில் எழுத வேண்டும்.
3. அனுபவம் உள்ளவர்கள் ரெஸ்யூமில் 10-15 வருட அனுபவத்தின் வரலாறுகளை எல்லாம் எழுத வேண்டாம்.
4. ‘Duties included’, ‘responsible for’, ‘highly-creative’, ‘motivated’, ‘hardworking’ போன்ற வார்த்தைகளை ரெஸ்யூமில் தயவு செய்து எழுதிவிடாதீர்கள்.
5. ரெஸ்யூமில் “I am hardworking, passionate and a great team player," என்று எழுதுவதற்கு பதில் “Hardworking, passionate and a great team player.” என்று எழுதுங்கள்.
6. பழைய கம்பெனியில் இருந்து வேலையை விட்டு வந்த காரணத்தை ரெஸ்யூமில் எழுதி விட வேண்டாம்.
7. Font சைஸ் 12, 14 மற்றும் டைம்ஸ் நியூ ரோமனில் இருக்க வேண்டும்.
8. குறும்புத்தனமான இ-மெயில் முகவரியை ரெஸ்யூமில் கொடுக்க வேண்டாம். எடுத்துக்காட்டு: littleangel@gmail.com, iamsuperstar@gmail.com என்பதற்கு பதில் kumarbtech@gmail.com, karthikchemical@gmail.com என்று எழுதலாமே.
9. ரெஸ்யூமில் கல்லூரி அல்லது பழைய கம்பெனியில் செய்த சாதனைகளை சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக, உங்களால் கல்லூரி அல்லது முந்தைய கம்பெனிக்கு என்ன பலன். அந்த அனுபவம் தற்போதைய கம்பெனிக்கு எப்படி உதவப் போகிறது என்று டைப் செய்யுங்கள்.
10. உங்களை தேர்வு செய்யும் எம்ப்ளாயர்கள், ரெஸ்யூமை பார்த்தவுடன் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு Paragraph போன்று இல்லாமல். Bullet statement ஆக இருந்தால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக: Make your resume 6-second worthy. Hiring managers are busy people; give them best possible information in least possible time. You resume is no place to provide overdosed information – save it for the interview. என்பதற்கு பதில்
Make your resume 6-second worthy.
Hiring managers are busy people; give them best possible information in least possible time.
You resume is no place to provide overdosed information – save it for the interview. என்று எழுதலாம்.
Make your resume 6-second worthy.
Hiring managers are busy people; give them best possible information in least possible time.
You resume is no place to provide overdosed information – save it for the interview. என்று எழுதலாம்.
11. நீங்கள் ஒரு ஸ்டீல் கம்பெனியில் சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூமை பயன்படுத்துகிறீர்கள் என்றால், முந்தைய அனுபவம் கால் சென்டரில் "கஸ்டமர் கேர் உதவியாளர்" ஆக பணியில் இருந்திருந்தால். தயவு செய்து அந்த அனுபவத்தை பற்றி எழுத வேண்டாம். காரணம், அவர்கள் மனதில் இவர் இந்த கம்பெனியில் நிரந்தரமாக இருக்க மாட்டார், வேறு நிறுவனம் கிடைத்தால் சென்று விடுவார் என்று மனதில் நினைத்துக்கொள்வார்கள்.
12. ரெஸ்யூமை டைப் செய்து, பிரிண்ட் எடுத்து இரண்டு முறை படித்துப் பாருங்கள். தவறு இருந்தால் திருத்திக்கொள்ளுங்கள். இதை அவசியமாக செய்ய வேண்டும்.