கொங்குமலரின் புதிய அவதாரம் தான் BOOM.. ஒன்று சேர்ந்து ஜெயிக்கலாம் வாங்க...



பக்கத்து வீட்டில் ஒருவர் என்ஜினீயரிங் படித்து 1 லட்சம் சம்பளம் வாங்குகிறார். நானும் என்ஜினீயரிங் படிப்பேன் என்று சொல்லிவந்த பள்ளி மாணவர்கள். தற்போது நானும் என்ஜினீயரிங் படித்தால், வேலை கிடைக்காமல் தான் இருக்க வேண்டும் என்று என்ஜினீயரிங் படிப்பை தவிர்த்து வருகிறார்கள். ஆர்ட்ஸ் மற்றும் பிற துறைகளில் படித்தால் மட்டும், படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடுமா?. நிச்சயமாக இல்லை. படித்தவுடன் வேலை கிடைத்துவந்த காலம் இனிமேலும் வராது. ஒவ்வொரு மாணவர்களும் தன் திறமைகளை படிக்கும்போதே வளர்த்துக்கொண்டால் மட்டுமே படித்தவுடன் வேலை கிடைக்கும். இல்லையெனில், பல ஆண்டுகள் பணிக்காக காத்திருக்க வேண்டும். அனைவரிடமும் திறமை இருக்கிறது. ஆனால் அதை வெளிக்கொண்டுவர தாமதம் அல்லது சூழ்நிலைகள் வருவதில்லை. அதுமட்டும் இல்லாமல், வேலைகிடைக்கவில்லை என்றாலும் தொழில் செய்ய வழிகாட்டி வேண்டும். இதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் BOOM Institute… கார்ப்ரேட் நிறுவனங்களில் இருக்கும் HR மேம்பாட்டு அதிகாரிகளின் துணையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொங்குமலர் மற்றும் CWC நிறுவனம் மூலம் ஈரோடு பேருந்து நிலையம் அருகில் இன்னும் சில தினங்களில் இயங்க இருக்கிறது. 

என்ன செய்யப்போகிறோம்.....

1. கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு ஏற்றது போல் பயிற்சிகளை வழங்கினால், நிச்சயம் சிறந்த மனிதராக கொண்டுவரமுடியும். அதனால் கல்லூரி மாணவர்களுக்கும் BOOM Institute உதவி செய்கிறது.
2. கல்லூரியில் படித்து ஆறு மாதம் ஆகிறது, வேலை கிடைக்கவில்லையெனில் கவலை வேண்டாம். பல நிறுவனங்களில் ஆட்கள் தேவைப்படுகிறது. ஆனால், நிறுவனங்களுக்கு ஏற்றது போல் மாணவர்களிடம் திறமையும், பயிற்சியும் இல்லை. "ஒரு அடிக்கு எத்தனை இஞ்ச்" என்று மாணவர்களிடம் கேட்டால். பலவிதமான பதில்களைத் தருகிறார்கள். அந்த கேள்விக்கு ஒரு பதில், அதாவது ஒரு அடிக்கு 12 இஞ்ச் மட்டும் தான். நிறுவனங்களில் இருக்கும் காலியிடங்களை அறிந்துகொண்டு, அதற்கு ஏற்றதுபோல் BOOM Institute யில் பயிற்சி அளித்து வேலை வாங்கித்தருகிறோம்.
3. கல்லூரி மாணவர்களுக்கென்றே வேலைவாய்ப்புக்கு உதவிடும் வகையில் பிராஜெக்ட் மற்றும் இன்டர்ன்ஷிப் (INTERNSHIP) செய்து தரப்படும்.
4. நிறுவனங்களிடம் இருந்து வேலை வாய்ப்புகளை வாங்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன.
5. நிறுவனங்களில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அனைத்தையும் வழங்க இருக்கிறோம்.
6. கல்லூரிக்குச் சென்று மாணவர்களுக்கு கார்ப்ரேட் நிறுவனங்களில் வேலைகிடைக்க "கார்ப்ரேட் நிறுவனப் பயிற்சி" யும் வழங்கப்படும்.
7. www.theboomindia.com என்கிற இணையதளமுகவரி மூலம் வேலைவாய்ப்புக்கு இலவசப் பதிவு மற்றும் அலுவலகத்திலும் நேரடி இலவசப் பதிவு. பதிவு செய்தவுடன் அடையாள அட்டையும் வழங்கப்படும். பதிவுசெய்தபின் தகுதி அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேலை ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
8. படித்தவுடன் தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கும் வழிகாட்டப்படும். 


BOOM Institute யின் முகவரி விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

நமது BOOM Institute யின் இணையதள முகவரி: www.theboomindia.com