21 வயது இளைஞன், கான்ட்ராக்ட் பணிக்காக தமிழகத்தில் இருந்து துபாய் சென்றிருக்கிறார். எட்டு மாதம் முடிந்துவிட்டது. 2016 புதுவருட பார்டி முடிந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் இருக்கும் தன் குடும்பத்திற்கு 5 நாட்களாக போன் பேசவில்லை. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னசெய்வது என்று புரியாமல், கண்ணீருடன் உதவி கேட்டுவந்தார்கள். அந்த இளைஞரின் மொபைல் எண் உபயோகத்திலும் இல்லை. இளையதலைமுறை முக்கியபிரமுகரான சோழை புண்ணியமூர்த்தி என்கிற நண்பர் துபாயில் இருக்கிறார். அவரிடம் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். உதவி கேட்ட அறை மணி நேரத்தில் தன் உதவியை செய்யத்தொடங்கிவிட்டார். தன் வேலைகளை கூட பொருட்படுத்தாமல், இதற்காக மூன்று மணி நேரம் செலவிட்டு அந்த இளைஞர் இருக்கும் மருத்துவமனையை கண்டுபிடித்துக் கொடுத்துள்ளார். அந்த இளைஞரின் குடும்பம் மிகவும் சந்தோஷத்துடன் இருக்கிறார்கள். தெரியாத ஊராக இருந்தாலும், உதவி செய்ய நம் சகோதரர்கள் வருவார்கள் என்பதே நிச்சயமான உண்மை....