Lot of openings in TAMILNADU Government

தமிழ்நாடு சால்ட் கார்ப்ரேஷனில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை
சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு சால்ட் கார்ப்ரேஷனில் டெக்னிக்கல் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.7.2015
விவரங்களுக்கு: www.tnsalt.com

கன்டெய்னர் கார்ப்ரேஷனில் 174 உதவியாளர் வேலை
கன்டெய்னர் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் சீனியர் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.8.2015
விவரங்களுக்கு: www.concorindia.com

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் வேலை
சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.7.2015
விவரங்களுக்கு: www.tamingranites.com

பெல் நிறுவனத்தில் 50 டிரெய்னி பயிற்சி
பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர்வைசர் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் காமர்ஸ் பாடப்பிரிவில் இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.7.2015
விவரங்களுக்கு: careers.bhel.in

கல்பாக்கம் அணுசக்தி துறையில் 23 அப்ரண்டீஸ் பயிற்சி
கல்பாக்கம் அணுசக்தி துறையில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் எலக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், டீசல் மெக்கானிக், Refrigerator  & AC மெக்கானிக், ஃபிட்டர், பிளம்பர் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 22 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.7.2015
விவரங்களுக்கு: www.igcar.gov.in

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் வெல்டர், ஏ.சி மெக்கானிக், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், சர்வேயர், டீசல் மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 31.7.2015
விவரங்களுக்கு: www.hindustancopper.com

மசகோன் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தில் வேலை
மசகோன் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனத்தில் சேஃப்டி இன்ஸ்பெக்டர் மற்றும் QC – இன்ஸ்பெக்டர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். சேஃப்டி இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
QC – இன்ஸ்பெக்டர் பணியில் சேர விரும்புவோர் இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி அல்லது மெக்கானிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இரண்டு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 33 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 18.8.2015
விவரங்களுக்கு: www.mazagondock.gov.in

நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபாரட்டரியில் விங்ஞானி வேலை
பெங்களூரில் இயங்கி வரும் நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபாரட்டரியில் விங்ஞானி பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், Manufacturing,  டிசைன் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் எம்.இ அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும். 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.8.2015
விவரங்களுக்கு: www.nal.res.in

நீலகிரி Cordite தொழிற்சாலையில் 163 காலியிடங்கள்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம் நீலகிரியில் இயங்கி வரும் Aravankadu Cordite தொழிற்சாலையில் Chemical process worker 'SS' மற்றும் Multi tasking Staff பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
Chemical process worker 'SS' பணியில் சேர விரும்புவோர் கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட்மெட்டல், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பாய்லர் ஆப்ரேட்டர், ஏ.சி மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
Multi tasking Staff பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்கிறார்கள்?.
எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும்.
Chemical process worker 'SS' பணிக்கு ஜெனரல் சயின்ஸ், ஆப்டிட்யூட், டெக்னிக்கல் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஜெனரல் சயின்ஸ் பிரிவுக்கு 10 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 10 மதிப்பெண்களும், டெக்னிக்கல் பிரிவுக்கு 80 மதிப்பெண்களும் உள்ளன. இத்தேர்வுக்கு 2 மணி நேரம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை அடுத்தகட்டமாக டிரேடு தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
Multi tasking Staff பணிக்கு General intelligence & reasoning, Numerical aptitude, General english, General awareness பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். General intelligence & reasoning பிரிவுக்கு 25 மதிப்பெண்களும், Numerical aptitude பிரிவுக்கு 25 மதிப்பெண்களும், General English பிரிவுக்கு 50 மதிப்பெண்களும், General awareness பிரிவுக்கு 50 மதிப்பெண்களும் உள்ளன. தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு. ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். இந்த பணிக்கு டிரேடு தேர்வு கிடையாது. முதல்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை நேரடியாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. விண்ணப்ப கட்டணம் ரூ.50/- யை "The General Manager, Cordite factory, aruvankadu" payable at coonoor or udhagamandalam (Ooty) என்கிற முகவரிக்கு ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
2. டி.டி.யை எடுத்த பின்னர், தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை டி.டி.யின் பின் பக்கத்தில் தவறாமல் எழுத வேண்டும்.
3. விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், டி.டி.யையும் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
5. விண்ணப்ப கவரின் மேல் "APPLICATION FOR THE POST OF ________" என்று எழுதியிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris district, Tamilnadu. Pincode – 643 202
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 3.8.2015
விவரங்களுக்கு: ofbindia.gov.in

No comments:

Post a Comment