என்னங்க பெண் குழந்தைனு கவலையா?.


பத்து வருடத்திற்கு முன்பெல்லாம், பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஒரு கிழவியிடம் குழந்தையை கொடுத்து விஷப் பாலை ஊற்றி அந்த குழந்தையை கொன்றுவிடுவார்கள். பத்து வருடத்திற்கு முன்புதான் இந்த கொடுமையா, இப்ப இல்லையானு கேள்வி இருக்கிறதா?. ஆமாங்க, இப்போதும் இந்த தவறு நடந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லா தம்பதிகளும், ஆண் குழந்தைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். பெண் குழந்தையை படிக்க வச்சு வரதச்சனை கொடுத்து கல்யாணம் பண்ணித்தரனுமே. ஆனால், ஆண் குழந்தைகளுக்கு அது தேவையில்லை?..
பெண் குழந்தை பிறந்தால் கவலைப் படாதீர்கள். பெண் குழந்தைகளுக்காகவே மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு கல்லூரி செலவை மற்றும் கல்யாணத்திற்கு உதவுவதற்காக "சுகன்யா சம்ரித்தி அக்கவுண்ட்".

என்ன தகுதி?.

ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி. இரட்டை குழந்தைகள் என்றால் மூன்று குழந்தைகள் வரை அனுமதிக்கப்படும். ஒரு குழந்தையின் பெயரில் ஒரு அக்கவுண்ட் மட்டும்தான் தொடங்கமுடியும்.

வயது வரம்பு?
பத்து வயதிற்கும் குறைவாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த அக்கவுண்ட்.

வட்டி விகிதம்?.
ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவிக்கும். இந்த ஆண்டுக்கான (2014-2015) வட்டி விகிதம் 9.1% என அறிவித்துள்ளது. இந்தியாவில் எங்கு சென்றாலும், இந்த அக்கவுண்ட் யை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கணக்கை எப்படி, துவங்குவது?.
குறைந்தபட்சம் 1000 ரூபாயை பயன்படுத்தி, போஸ்ட் ஆஃபீஸில் கணக்கை தொடங்க வேண்டும். பின்னர், 14 வருடத்திற்கு அந்த கணக்கில் மாதந்தோறும் பணத்தை செலுத்தலாம். செலுத்திய பணத்தை 14 வருடம் முடிந்தவுடன், மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம்.

அபராதம்?..
போஸ்ட் ஆஃபீஸ் கணக்கில் குறைந்தபட்ச தொகை ரூ.1000/- இல்லாமல் பராமரித்தால். வருடத்திற்கு ஒரு முறை 50 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும்.

பெண் குழந்தைகளே கணக்கை பயன்படுத்தலாம்?
பத்து வயதிற்கும் மேலான பெண் குழந்தைகள், இந்த கணக்கை பயன்படுத்தலாம். பெற்றோர்கள் தரும் பாக்கெட் பணத்தை, அவர்களே சேமித்துக்கொள்ள ஒரு வசதி. பத்து வயதிற்கும் குறைவாக இருந்தால், பெற்றோர்கள் மூலம் பயன்படுத்தலாம்.

பணத்தை எப்போது எடுக்க முடியும்?.
குழந்தைக்கு 21 வயது ஆனதும் அல்லது திருமணத்திற்கு தேவை என்றால் எடுத்துக்கொள்ளலாம். 18 வயது நிறைந்தவுடன் பாதித் தொகையை கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
பெண் குழந்தை பெற்றவர்களுக்கு இந்த கணக்கு ஒரு பொக்கிஷம் தாங்க!!!!


No comments:

Post a Comment