இந்திய அரசின் கீழ் இயங்கி வரும் நவரத்னா நிறுவனமான என்.எம்.டி.சி நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
எக்சிக்யூட்டிவ் டிரெய்னி (டெக்னிக்கல்) பணியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், செராமிக்ஸ், சிவில், மைனிங், கெமிக்கல், மினரல் பிராசஸிங், இன்டஸ்ட்ரீயல் என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ/ பி.டெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையில் எம்.சி.ஏ டிகிரி படித்திருக்க வேண்டும்.
எக்சிக்யூட்டிவ் டிரெய்னி (அட்மினிஸ்ட்ரேஷன்) பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டத்துடன் Material Management/ மார்கெட்டிங்/ Sales Management/ Sociology/ Social work/ Labour Welfare/ Personnel Management பிரிவில் எம்.பி.ஏ அல்லது பி.ஜி டிப்ளமோ படித்திருக்க வேண்டும். சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ தேர்ச்சி பெற்றவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
மேனேஜ்மென்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) பணிக்கு 191 காலியிடங்களும், மேனேஜ்மென்ட் டிரெய்னி (அட்மினிஸ்ட்ரேஷன்) பணிக்கு 49 காலியிடங்களும் உள்ளன.
இந்தப் பணிக்கு எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?.
எழுத்துத் தேர்வு, குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் இத்தேர்வை எழுதலாம். இந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி அன்று எழுத்துத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.
எழுத்துத் தேர்வில் ஐந்து பிரிவுகளாக கேள்விகள் இருக்கும். முதல் பிரிவில் Domain Knowledge தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வுக்கு 75 நிமிடங்கள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக ஆப்டிட்யூட், வெர்பல் எபிலிட்டி, ரீசனிங், ஜெனரல் அவேர்னஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இந்தப் பிரிவுகளுக்கு விடையளிக்க 75 நிமிடங்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 25 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்கள் உள்ளன.
ஐந்து பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிகளிலும் 50 சதவிகித மதிப்பெண்கள் பெறுபவர்களை அடுத்தகட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் 75க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அத்துடன், குரூப் டிஸ்கஷனிற்கு 15 மதிப்பெண்களும், இண்டர்வியூவுக்கு 15 க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, என்.எம்.டி.சி நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் கிடையாது. நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டை பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.03.2015
இணையதள முகவரி: www.nmdc.co.in
பி.இ/ பி.டெக் - மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், செராமிக்ஸ், சிவில், மைனிங், கெமிக்கல், மினரல் பிராசஸிங், இன்டஸ்ட்ரீயல் - 451 பேருக்கு எக்சிக்யூட்டிவ் டிரெய்னி வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment