மாதம் ரூ.1,20,000/- சம்பளத்துடன் தமிழ்நாட்டில் வேலை.

என்னுடைய மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. சென்னையில் இருந்து ஒரு மாணவர் "சார், நான் உங்க வெப்சைட்டை தினமும் பார்த்து வருகிறேன், இலவசமாக உதவி செய்கிறீர்கள் மிகவும் நன்றி" என்று புன்னகையுடன் பேசிய அந்த மாணவன். திடீரென்று, கண்களங்கியபடி ஆவேசத்துடன் பேசத் தொடங்கினான்.
"நான், கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடி வருகிறேன். ஒரு பெண், என்னுடைய மொபைலுக்கு கால் செய்து, உங்களுக்கு ஹோண்டா நிறுவனத்தில் வேலை இருக்கிறது. நாளை அலுவலகத்திற்கு வாருங்கள், என்றார். நானும் அந்த அலுவலகத்திற்கு மறுநாள் காலை சென்றேன். அங்கு பெரிய வேலை வாங்கித்தரும் கன்சல்டன்ட் போல, நிறைய கம்பெனியில் வேலை இருக்கு, ஹெச்.சி.எல் நிறுவனத்தில் கூட வேலைனு சொன்னாங்க. பரவாயில்லை, நானும் வேலை வாங்கிடலாம்னு மனதில் ஒரு சந்தோஷம். உடனே அந்த பெண், என்னிடம். தம்பி, நாளைக்கு உங்க அம்மா, அப்பாவை கூட்டிட்டு வா. வேலை வாங்கிடலாம்னு சொன்னாங்க. இதைக் கேட்டவுடன், எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை. மறுநாள், அந்த பெண் சொன்னபடி பெற்றோரை அழைத்துச் சென்றேன். பெற்றோரிடம் அந்த பெண், உங்க மகனுக்கு வேலை கேரண்டி. மாதம் 45000 ரூபாய் சம்பளம். ஆனா, 35000 ரூபாயை செலுத்தினால் தான் வேலை கிடைக்கும்னு சொன்னாங்க.
உடனே பெற்றோர்கள் எனது தங்கைக்காக சேர்த்து வைத்த நகைகளை அடகுக்கு வைத்து பணம் புரட்டினார்கள். அந்தப் பணத்தையும் செலுத்தினோம். வேலை கிடைத்திருக்கும்னு நினைக்கிறீர்களா?.
இரண்டு மாதங்கள் ஆனது, வேலை வாங்கித்தரவில்லை. சரி, போன் செய்து பார்ப்போம்னு, போன் செய்தால் எடுக்கவில்லை. நேரில் சென்றேன், வேலையில்லைனு சொன்னாங்க. பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள், என்று கேட்டேன். இரண்டு அடியாட்கள் வந்தார்கள், என்னை அடித்தார்கள். நானும், அடியை மட்டும் வாங்கிட்டு வந்தேன். இதற்கு, சில அதிகாரிகளும் உதவியாக இருக்கிறார்கள். என்னால் என்ன செய்ய முடியும்?." என்றான்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்!!

பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும்னு யாரவது சொன்னா. கேள்வி கேளுங்கள். இல்லையென்றால், முதலில் வேலை வாங்கிக் கொடுங்கள். முதல் மாத சம்பளம் வாங்கிய பிறகு தருகிறேன்னு சொல்லுங்க. அப்படியும் ஒத்துவரவில்லை என்றால் "நீங்கள் வாங்கித்தரும் வேலைக்கு நான் செல்கிறேன், முதல் மாத சம்பளத்தை மட்டும் கண்டிப்பாக உங்களுக்கு தருகிறேன்"' என்று ஒரு பேப்பரில் எழுதி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம்னு சொல்லுங்கள். உண்மையானவராக இருந்தால் சரி என்பார்.

வேலை வாங்கித்தரும் கன்சல்டன்ட் என்ன செய்கிறார்கள்?.

கன்சல்டன்ட் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த மாதம் ஒரு அலுவலகம், அடுத்த மாதம் வேறு அலுவலகம் என மாற்றிக்கொள்ளலாம். இப்படித் தான் செய்து வருகிறது ஏமாற்றும் கும்பல். எங்கு பார்த்தாலும், வேலை வாங்கித்தரும் கன்சல்டன்ட். எப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குதுனு, நினைத்துப் பாருங்கள்.
1. தினமும் நாளிதழ்களில் வரும் வேலை வாய்ப்புச் செய்திகளை எடுத்துக்கொண்டு. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் போன் செய்து, ஆள் இருக்காங்கனு சொல்லுவாங்க.
2. வேலைவாய்ப்பே இல்லை என்றால் கூட. பெரிய நிறுவனங்களின் ஹெச்.ஆர் மூலம் வாங்கித்தருகிறோம்னு சொல்லி பணம் வாங்கிவிட்டு, அடுத்த மாதம் அலுவலகத்தை மாற்றிவிடுவார்கள்.
3. நிறுவனங்களில் இருக்கும் ஹெச்.ஆர் அதிகாரியிடம், ஒரு நபருக்கு 10000 ரூபாய் தருகிறோம் என்று பேரம் பேசுவார்கள். உங்களிடம் வாங்கும் 40000 ரூபாயில் 10000 ரூபாய் ஹெச்.ஆர் அதிகாரிக்கு.
4. சில பேர், நமது கொங்குமலர் வெப்சைட்டையும் விட்டு வைக்கவில்லை.
இதை செய்வதனால், அவர்களுக்கு மட்டும் தான் லாபம். உங்களுக்கு, அப்படி வேலை கிடைத்தாலும், அது ரொம்ப நாள் இருக்காது. காரணம், ரெக்கமண்ட் மூலம் சென்றால் நம்முடைய மதிப்புகள் குறையத்தானே செய்யும்.
காலம் கடந்தாலும் கவலைப் படாதீர்கள். திறமைசாலிகளுக்கு கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும்.

கல்சல்டன்ட் எப்படி வந்தார்கள்?.

வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க, இந்தியா வரும் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை படுகின்றன. அவர்கள், இந்தியாவில் யாரை தொடர்பு கொள்வார்கள். அதனால், மற்ற நிறுவனங்களில் வேலை செய்து வரும் ஹெச்.ஆர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆட்களை தேர்வு செய்து தரச்சொன்னார்கள். இப்படி வந்த கன்சல்டன்ட். தற்போது, வேலையில்லா சூழ்நிலையை புரிந்து கொண்டு, சில ஆட்கள் ஏமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.

கன்சல்டன்ட் நடத்துபவர்களுக்கு ஒரு தடை போடுங்கள்

கல்சல்டன்ட் பதிவு பெற்றிருக்க வேண்டும். வேலை வாய்ப்பு தகவலை தெரிவிக்கும் போது, கல்சல்டன்ட் பதிவு நம்பரையும் விளம்பரம் செய்ய வேண்டும். பதிவு நம்பர் இருந்தால் மட்டும், அந்த கன்சல்டன்ட் நபரை தொடர்புகொள்ளலாம்.
கன்சல்டன்ட் பதிவு பெற வேண்டும் என்றால் 5 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செய்ய சொல்லுங்கள். 
நேர்மையான கன்சல்டன்ட் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

No comments:

Post a Comment